தமிழனை ஆள(அழிக்க) நினைக்கும் கன்னடத்திக்கு

இந்த பொம்மையார் தமிழ் நாட்டில் ஏன் தேர்தலில் நிற்கிறார் என்று தெரியவில்லை, இவருக்கு சிங்கள மக்களின் பேராதரவு இருப்பதால் இவர், அங்கு சென்று போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது. திருமங்கலம் தொகுதியில் இவர் தோற்றது இவரது தமிழ்ப்பற்றை சரியான முறையில் மக்கள் புரிந்து கொண்டு, அதற்கு சரியான தீர்ப்பை வழங்கினார்கள் என்றே சொல்ல முடியும். இதே தீர்ப்பை இந்த பாராளுமன்ற தேர்தலிலும் வழங்குவார்கள் என கண்டிப்பாக சொல்ல முடியும். மொத்தமும் அதிமுக தோற்கதான் போகிறது. வேண்டுமானால் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

மக்கள் இப்ப எல்லாம் சின்னத்தை பார்த்தும், பொய் பிராச்சாரங்களை பார்த்தும் ஓட்டு போடுவதில்லை. ஜெ வின் மேல், தமிழின துரோகி என்ற முத்திரை விழுந்துள்ளது. இதை கருணாநிதி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். உண்மையாக தமிழ் மக்களுக்கு உழைத்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். தமிழின துரோகிகளை ஓரம் கட்டலாம். காங்கிரஸை கழட்டி விடலாம்.

தமிழ் மக்கள் எவரும் விடுதலை புலிகளை எதிரிகளாக பார்ப்பதில்லை. இந்த அரசியல் வாதிகளும், பார்ப்பன பத்திரிக்கைகளும் அப்படி காட்ட நினைக்கினறன. அதன் பலன் இன்று வாக்குகளாக வந்து முடிவு சொல்கிறது. விடுதலை புலி அழிந்தாலும் அதில் ஒவ்வொருவரும் ஒரு தமிழனே. காட்டில் இருந்து, வானத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல அவர்கள். தனது இன அழிவினை தடுக்க வேறு வழியின்றி கையில் ஆயுதம் ஏந்தியவர்கள், உரிமைக்காக போராடும் தமிழ் இனத்தில் இருந்து வந்தவர்களே.

தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒருவர் விடுதலை புலிகளில் ஒரு உறுப்பினராக இருக்கும் போது, எப்படி-ம்மா விடுதலை புலிகளை அழிக்கனும் சொல்வது ஒரு தமிழ் குடும்பத்தை அழிக்க சொல்வது போன்றதே. ஆக என்ன புத்திசாலி தனமான ஒரு அறிக்கை உங்கள் அறிக்கை, தமிழீழ மக்கள் ஒகேவாம். ஆனால் விடுதலை புலிகள் ஓகே இல்லையாம். புத்திசாலி பொம்மையார்.


விடுதலை புலிகளை எதிர்ப்பேன் என்பது, உங்கள் வாக்கு வங்கியை கடுமையாக பாதிக்கப்போவது உறுதி. மக்கள் வாயில் வேண்டுமானால் நீங்கள் பூட்டு போட முடியும் ஆனால் அவர்கள் மனதை உங்களால் பூட்டு போட முடியாது.

Posted in |

3 comments:

 1. " உழவன் " " Uzhavan " Says:

  Thozhare..

  pls give comments for my kavithai " Eal thaalattu"

  http://tamiluzhavan.blogspot.com

 2. புதுகைச் சாரல் Says:

  ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை  சத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை  நிஜார் போட்ட மனிதனின் பேஜார்

 3. புதுகைச் சாரல் Says:

  ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை  சத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை  நிஜார் போட்ட மனிதனின் பேஜார்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails