ஈழப்பிரச்சினை: செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்..

நன்றி மாணவர்களே,உங்களையும் சில கருங்காலிகள் நாடகம் என்று சொல்லலாம். கவலை வேண்டாம், இந்த ஈனர்களை ஒதுக்கி புறந்தள்ளுங்கள். உண்மை ஒரு நாள் வெல்லும். வெகு விரைவில் தமீழீழம் மலரும். நாம் அயராது உழைப்போம். தமீழீழ கல்வெட்டில் உங்கள் பெயரும் இடம் பெறும். ஒரு நாள் உங்கள் பரம்பரை உங்களை நினைத்து பெருமைப்படும்.

ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் ஜனவரி 22, 2009 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் :

1. கெம்ப குமார்
2. திருமுருன்
3. விஜயகுமார்
4. மணிவேல்
5. பிரவீன்
6. சுரேஷ்
7. ராஜா
8. ராஜ்குமார்
9. முஜிபுர் ரகுமான்
10. முனிஷ் குமார்
11. நவீன்
12. பிரியன்
13. பிரபு
14. ஆறுமுக நயினார்



திரு. கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக உதவ வேண்டும். இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை நாங்கள் உறுதியாகத் தொடருவோம். எங்களை கைது செய்தாலும் சிறையிலும் எங்கள் உண்ணாவிரதம் தொடரும்' என்று உறுதியோடு கூறினார்.

படங்கள் உதவி: இலக்குவண்

மேலும் படங்களுடன் பார்க்க.

http://www.keetru.com/literature/functions/fasting.php

Posted in |

1 comments:

  1. கிரி Says:

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails