தமிழனாகப் பிறந்ததற்கு வேதனைப்படுகிறேன்: நடிகர் வடிவேலு

இப்படியாவது ஆறுதல் சொல்ல ஒரு உள்ளம் உள்ளதே, எங்களை எல்லாம் சிரிக்க வைத்த வைகைப்புயலே, இன்று உனக்கு யார் ஆறுதல் சொல்வது. நம் இனத்தை காக்க முடியாமல் நாம் படும் வேதனை, யாருக்கு புரிய போகிறது. இன்று தமிழன் நிலைகுலைந்து போயுள்ளான், ஆனைக்கு ஒரு காலம் வந்ந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். மனம் தளராமல் போராடுவோம் நம் இனத்தை காப்பாற்றுவோம். அங்கே சிரிப்பவர்கள் அது ஆணவ சிரிப்பு.

இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்களை திரைப்பட நடிகர் வடிவேலு, இயக்குநர்கள் சுந்தர்.சி, ஆர்.கே.செல்வமணி, மனோபாலா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதன்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களை திரைப்படக் கலைஞர்கள் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படியும் வேறு வழியில் இணைந்து போராட்டத்தைத் தொடரலாம் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இச்சந்திப்பின்போது நடிகர் வடிவேலு கூறியது:

குடியரசு தினத்தன்று கொடியை அணிந்துகொண்டு இந்தியனாக பெருமைப்பட்டேன். ஆனால் இன்று இந்த மாணவர்களை பார்த்தபோது தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனைப்படுகிறேன்.

செய்தித்தாள்களில் இலங்கையில் 300 பேர் இறந்து விட்டனர், 1000 பேர் காயமடைந்தனர் என்ற செய்திகளைப் படிக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.

மாணவர்களின் போராட்டம்தான் எல்லா போராட்டத்திற்கும் வெற்றியை அளித்துள்ளது என்றார்.

இயக்குநர்கள் மனோபாலா, ஆர்.கே.செல்வமணி, சுந்தர் சி ஆகியோர் கூறியது:

இலங்கையில் தமிழனத்தைக் காக்க போர்நிறுத்தத்துக்கு பிரதமர் வழிவகை காணவேண்டும். இயக்குநர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என ஒவ்வொரு குழுவாக தினசரி வந்து சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றனர்.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    நல்லா வக்கணையா பேசுவாரு அந்த ஆளூ. அப்புறம் இலங்கை தமிழனுக்கு காசு குடுயான்னா ஒரு லட்ச ருபாய் குடுப்பாரு...ஆனா இந்த ஆளோட ஒருநாள் சம்பளமே 7-8 லட்சம். வர்ற எலக்சனுல நிக்க போடுற சீன் மாதிரிதான் தெரியுது. இநத ஆளைப்போய் சீரியஸ்ஸா எடுத்துகிடு ஒரு பதிவா???

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails