120 இராணுவ டாங்கி பருசுப்பொருளுடன் சமாதானம் பேச வருகிறார் பிரணாவ்
Posted On Tuesday, 27 January 2009 at at 14:17 by Mikeஇந்திய அரசே உனக்கே இது நியாயமா, தமிழர்கள் மேல் ஏன் இந்த கோபம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறாயே. ஏனிந்த கோபம் இதுதான் வெளியுறவு கொள்கையா அல்லது மன்மோகன், சோனியா, பிராணப், நாராயணனின், மேனன் உங்களின் தனிப்பட்ட தமிழின வெறுப்பா. குனிய குனிய குட்டு வாங்கும் தலை கருணாநிதி இருக்கும் வரை நீங்கள் ஆனந்த கூத்தாடுங்கள். உண்மை ஒரு நாள் வெல்லும்.
முல்லைத்தீவை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவாகர அமைச்சர் பிரணாப் முஹர்ஜி இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு கொழும்பு வரும் முஹர்ஜி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து இலங்கையின் பிந்திய நிலைவரகள் குறித்துக் கலந்துரையாடுவார் எனத் தெரியவருகிறது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வைக் காண்பதற்கு அரசியல் ரீதியான தீர்வொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு, பிரணாப் முஹர்ஜி வலியுறுத்திக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலான அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றை முன்வைக்க வேண்டுமென பிரணாப் முஹர்ஜி, தனது இலங்கை விஜயத்தில் அழுத்தம் கொடுப்பார் எனவும் கூறப்படுகிறது.
இலங்கையின் இனப்பிரச்சினை இராணுவ ரீதியாக மாத்திரம் தீர்க்கப்பட முடியாது, அரசியல் ரீதியான தீர்வின் மூலமே நீண்டகாலம் நிலைத்திருக்கும் சமாதானத்தை எட்ட முடியுமென இந்தியா தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.
அதேநேரம், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, இலங்கைக்குச் சென்று அங்கு போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான சர்வகட்சிக் குழு பிரதமரைக் கோரிக்கை விடுத்திருந்தது. இதன் பின்னணியிலேயே பிரணாப் முஹர்ஜியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
புலிகள் மீது அனுதாபம் இல்லை: பிரணாப் முஹர்ஜி
விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுதாபம் காட்டாது எனத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, மோதல்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
“நாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்றோம். எனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிர்க்கின்றோம். எனவே, எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் நாங்கள் அனுதாபம் காட்டமாட்டோம். குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு” என பிரணாப் முஹர்ஜி இந்தியாவில் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
எனினும், அபாயத்திலிருக்கும் மக்கள் குறித்து இந்தியா அக்கறை செலுத்தியிருப்பதுடன், மோதல் சூழ்நிலையால் உதவியழந்திருக்கும் மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை நாங்கள் ஆராயவுள்ளோம் என்றார் அவர்.
இந்த விடயம் தொடர்பாகவே தனது இலங்கை விஜயத்தின் அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடவிருப்பதாக முஹர்ஜி, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கையின் பிந்திய நிலைவரங்கள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் தான் பல்வேறு தடவைகள் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
“கொழும்பு சென்று இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளவுள்ளேன்” என இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சிங்கள ராணுவத்துக்கு பரிசளிக்கவென இந்திய அரசால் தொடரூந்தில் அடுக்கப்பட்டிருக்கும் யுத்தத் தாங்கிகள்
ஏரோடில் தொடரூந்து தரித்து நின்றபோது எடுக்கப்பட்ட படம் இது. இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் அனைவரும் கைதாகியுள்ளதாக செய்தி வந்திருக்கிறது.
நன்றி : http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2059:2009-01-27-11-55-16&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53
பிராணப் மகிந்தா கொடுக்கும் பியரை அடித்துவிட்டு கிறிக்கெட் பார்த்துவிட்டு வருவார். பொன்சேகா தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கோமாளி என்று சொல்லுவார்.
சோனியாவின் பழி வாங்கும் படலத்திற்கு ஊதுவத்ற்குப் போன சிவ சங்கரமேனனும்,
இப்போது சென்றுள்ள பிரணாப்பும்
தமிழனுக்கு மானம்,வெட்கம்,சூடு,சொரணை எதுவுமே இல்லை என்பதை உலகுக்குப் பறை சாற்றுவதைக் கண்டு
ராஜபக்சே சிரிக்கின்றார்.
வேறு வழியில்லை. புத்தியிருந்தால் போராடும் குணம் இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள்.
இல்லையேல் மொத்தப்பேரும் கிளம்பி வேறுவேறு தீவு இருந்தால் செல்லுங்கள்.
தாய்த்தமிழனை நினைக்காதீர்கள். எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனை.
யார் முதலில் சாவோம் என்று.அப்படியே உதவ நினைத்தாலும் வாயிலேயே
அடிப்பார்கள். சம்பந்தம் இல்லாமல் கேஸ் வரும்.தேவையா ? சீமானையும் அமீரையும் பாருங்கள்.
எனவே பிரணாப்பாவது, புடலங்காயாவது !
தமிழினத்தலைவரையும், அம்மாவையும் பார்ப்போம் என அழைக்கிறீர்கள்.
வருவமா ? வந்து விடுவோமா ?
தெரிந்தே கிண்டலா ?
கடவுளை மட்டுமேதான் இங்குள்ள தமிழனால் ஈழத்தமிழன் வாழ்வு சிறக்க
வணங்க முடியும்.
கடவுளே திருச்செந்தூர் முருகா ! உன் காலுக்கு கீழே நடப்பது தெரியவில்லையா ?
கன்னியாகுமரித்தாயே உன் கண்ணுக்கும் தெரிய வில்லையா ?
காப்பாற்று .கடவுளே காப்பாற்று !
Voting For ADMK is தமிழின எதிரிக்கான வோட்டு
Voting For DMK is தமிழின துரோகத்துக்கான வோட்டு
Voting For தமிழர் Munnani is தமிழின எதிர்காலத்துகான வோட்டு
What’s happening currently in Eelam and dumped reaction in Tamil Nadu will have very serious impact in the Self Determination and Self Respect Of Tamils.
We can see that existing Dravidian parties are either supportive to Sri Lankan government or mute spectator of the happenings.
ADMK is Thamizhinna Ethiri
DMK is Thamizhina Throogi
Suitable Alternate front need to be formed and this is the NEED of this Hour. This alone will safe guard and protect the Tamils in this venomous world. And Tamils will have some one to raise and openly speak up Tamils Issues, else there won’t be any one to raise the voice of Tamils in Political arena.
• ADMK is Anti-Tamil, shell we don’t waste our time in discussing about it. But at least 60% of ADMK voters will (Note : Not Jaya’s Supporters or followers) support the cause of Tamils in Sri Lanka.
• DMK has back stabbed Tamils and become as a Power Addict and Slave of Congress. Karunanithi’s focus is only to protect the Wealth and to ensure smooth Power transition to his entire FAMILY. We can’t trust DMK further as the Pole Ship of Tamils.
• The Second Line DMK leaders and Leader-in-Lines never ever spoke about the recent carnage in Sri Lanka and voiced their support. M K Stalin speaks about only the Fund allotted to the Local Bodies and Women Self Help Groups. He can only become a good Manager / Administrator but NOT as a Leader, who takes brave decisions and take control of situations. He never ever demonstrated his voice / leadership skills on Tamils affairs. Same is the case of Azhagiri, he may bring victories on vote based politics, but still he need to prove his capabilities as a Tamil Leader.
• If any suitable alternative is shown, at least 75% of DMK voters / supporters will switch side at this movement based on the sufferings of Tamils in Sri Lanka and DMK’s inactiveness and back stabbing. (Note : NOT Karunanithi’s supporters or followers).
• Congress will face the worst decline of his voters and apparently 20 to 25 leaders alone will be there in each assembly constituencies, Congress is getting seats only because of alliance with Dravidian Parties.
• Other National Parties are not having enough support bases and not represent the average Tamils.
Now, the Only alternate is to bring the like minded parties in Tamil Nadu under one front for Supporting the Self Determination of Eelam Tamils and seek the Tamils support in the forth coming Parliament Election.
Hope Sonia is in revenge mood and his Son Rohul who’s projected as next Congress Leader will follow the same. Hence to counter this, bringing all like minded political parties and Leaders under single front is Need of the Hour.
This alone should be the Single Point Agenda and No ego should surface between them.
MDMK , Thirumavalan’s DPI, PMK, CPI, and small parties & groups like TR and others can form a viable alternative and contest the elections, keeping Sri Lankan Tamil issue as Single Point Agenda under the banner Tamilar Munnani.
By putting right candidates in very important constituencies, definitely this Tamilar Munnani can with at least 20 to 25 seats.
Very Important: Need to deploy high profile and popular candidates in Congress Leader’s constituencies to ensure that they are defeated.
Thirumavalavan – Chidambaram
Vijaya TR – Mailaduthurai (Mani Shankar)
Director Seeman – Sivagangai (P Chidamparam)
Actor Sathiyaraj – Erode (EVKS Elangovan)
Kaivijar Thamarai – Kovai (Prabu / SRB)
Kolathur Mani – Salem (KV Thangabalu)
If the above person’s are really interest in Tamils welfare, they should NOT keep away from contesting the elections.
If they get Peoples mandate, who else will question the Support for Sri Lankan Tamils.
Voting ADMK Alliance is Thamizar Ethirikanna Votu
Voting DMK Alliance is Thamizar Throogathukanna Votu
Voting for Tamilar Munnani is Thamizhar Ethirkalathukana votu
விடுதலை அடைய வேண்டியது தமிழக தமிழனா அல்லது தமிழீழ தமிழனா?
ஏற்கெனவே ஈழப்பிரச்சினையில் பிரதமர் ‘கவலை தெரிவிக்க’ ஒரு போராட்டம்.... அவர் தம் சக்திக்குட்பட்ட அளவில் முயல்வதாகக் கூறவைக்க ஒரு போராட்டம்.... இப்போது பிரணாப் முகர்ஜியைக் கிளப்பி அனுப்ப ஒரு போராட்டம்.....
மழை வெள்ளத்தில் ஒரு போராட்டம்..
சாகும் வரை மாணவர்கள் பட்டினி போராட்டம்..
இப்படி இங்கே தமிழன் போராடிக் கொண்டே இருக்க வேண்டியதும், ஈழத்தமிழன் அங்கே அன்றாடம் கொல்லப்பட்டுச் சாவதும்தாம் தமிழனுக்கு விதிக்கப்பட்ட வாழ்வா...? இந்தக் கொடுமையைப்பற்றி அக்கறைப்படாது, நமக்கு பசப்பு வார்த்தைகள் கூறி இழுத்தடிப்பு உத்தியில் ஈடுபடத்தான், நம்மை ஏமாற்றத்தான் நமக்கு தமிழக, தில்லி அரசுகளா....? முதலில் தேசியம் என்றால் என்ன? தன்னுடைய நாட்டு பிரஜைகளை தன்னுடைய அந்தஸ்தாக கருதி அவர்களது கோரிக்கைக்கு செவிமெடுத்து அதன் படி செயல்படுவதே தேசியம் என்பதாகும்..அன்று சிங்கபூரில் ஒரு அமெரிக்கனுக்கு 5 கசையடி தண்டனை என்றதும் அமெரிக்க அரசு தன் முயற்சியால் தடுத்து நிறுத்தியது..அது தேசம் ஆனால் இந்தி தேசம் எவ்வாறானது?
உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்த தேசியம் ஆரியர்களுக்கும் வங்காளிகளுக்கும் சிங்குகளுக்கும் உரித்தானவை.. சிறிது கூர்ந்து நோக்கினால் மேற்கூறிய யாருக்காவது துன்பம் என்றால் இந்தி அரசு தாம் தூம் என்று துள்ளி குதிக்கும்..
ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது ‘இந்தி’யா தானே..?
1)காவேரி பிரச்சனை
2)முல்லை பெரியாறு பிரச்சனை
3)ஒக்கேனக்கல் அல்ல அது தவறு அது கிருஷ்ணகிரி சேலம் என நீளும் போல தெரிகிறது
4)கண்ணகி கோயில் பிரச்சனை
5)பாலாற்று பிரச்சனை
6)தமிழக மீனவர் பிரச்சனை
இதில் ஒன்றிலாவது தமிழர்கள் சார்பாக நடுநிலைமையோடு இந்தி அரசு நடந்து கொண்டதா?வங்காளிகளுக்காக வங்கதேசம் உருவாக்கிய இந்திய அரசு பண்டிட்ஜிக்களூக்காக இன்றும் காசுமீர் விவகாரத்தில் பாக்கிஸ்தானோடு அக்க போர் செய்கிறது..எனவே உங்களுக்கு புரியவில்லையா?தமிழனுடைய உயிரும் இவர்களுடைய மயி ம் ஒன்று என?
உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்த தேசியம் ஆரியர்களுக்கும் வங்காளிகளுக்கும் சிங்குகளுக்கும் உரித்தானவை.. மேற்கூறிய யாருக்காவது துன்பம் என்றால் இந்தி அரசு தாம் தூம் என்று துள்ளி குதிக்கும்
ஈழப்பிரச்சனைக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழமே. இதனை விடுதலைப்புலிகள் என்றோ உணர்ந்து விட்டனர். உலக நாடுகளும் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். ஆனால் இந்தி அரசின் தீர்வு என்ன? ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்க்கு உரிமையாம். இந்தி அரசு சொல்கிறது. இப்படிப்பட்ட மாய வாதங்களை சொல்லி தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை ‘இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க சொல்கிறார்கள். தன் மானமுள்ள தமிழர்கள் ஏற்காமாட்டார்கள் என்பதனை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது.
காவிரி பிரச்சனைக்கு 'கரு'நாகத்திடம் கெஞ்சல்
முல்லை பெரியாருக்கு கொலையாளியிடம் கெஞ்சல்
ஓக்கேனக்கலுக்கு 'கருநாகத்திடம் கெஞ்சல்
கண்ணகி வழிபாட்டு உரிமைக்கு கொலையாளியிடம் கெஞ்சல்
பாலாற்று பிரச்சனைக்கு கொல்டிகளிடம் கெஞ்சல்
தமிழக மீனவர் பிரச்சனைக்கு இந்தி காரனிடம் கெஞ்சல்
தமிழீழ இனபடுகொலையை நிறுத்த இந்திகாரனிடம் கெஞ்சல்
இப்படி மானம் கெட்டு பிச்சை எடுத்தும் கோரிக்கை வைத்தும் ஒரு தேசிய இனம் வாழுகிறது என்றால் அது தமிழினமே ஆகும்..ஒரு சிறிய மண்புழு கூட அதனை அழிக்கமுற்படும் போது
சிறிய எதிர்பையாவது காட்டும்..அகிம் இம்சை உண்ணாவிரதம் என்ற பெயரில் வீரத்தில் சிற்ந்த
தமிழர்களை முட்டா கூ ஆக்கியது யார் என்ன சிந்திக்க வேண்டும்..இவர்களுக்கு கார்கில் முதல் வங்கதேச பிரிவினை முதல் FRONT LINE லிருந்து சண்டை போட்டு சாக தமிழர்கள் வேண்டும்..பிற விவகாரத்தில் தேவையில்லை
தமிழர்கள் போலி இந்தி தேசியத்தில் இருந்து வெளிவர வேண்டும் இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை புதுடில்லி ஏகாதிபத்திற்திற்கு விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்
தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வரசுகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபடவேண்டும்
தமிழர்கள் போலி இந்தி தேசியத்தில் இருந்து வெளிவர வேண்டும்...
தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வரசுகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபடவேண்டும்//
ஆமாம், தமிழ்நாட்டுத் தமிழனும் நிம்மதியாக இருக்க கூடாது. ஈழத்தமிழன் மாதிரி பங்கருக்குள் வாழவேண்டும்.. எந்த நாடு அடைக்கலம் கொடுக்கும் என அகதியாய் அலைய வேண்டும்...
விளங்கீரும்!