நண்பர் வயல் வெளிக்காக

நண்பரே, தமிழின துரோகிகள் உங்கள் இணைய தளத்தை திருடி விட்டார்கள் போல் உள்ளது. google cached என்று மூலம் பிந்தைய செய்திகளை பெற்று கொள்ளலாம், உங்களுக்காக உங்களின் பதிவுகள், என்னால் முடிந்த உதவி.

This is Google's cache of http://vayal-veli.blogspot.com/. It is a snapshot of the page as it appeared on 28 Jan 2009 12:18:18 GMT. The current page could have changed in the meantime. Learn more

Text-only versionThese terms only appear in links pointing to this page: http vayal veli blogspot com
skip to main | skip to sidebar வயல் வெளி
ஆற அமர வயல் வெளியில் அமர்ந்து பேசலாம் வாங்க....

நண்பர்களே, வருகைக்கும், பதிவை படித்தமைக்கும் மிக்க நன்றி, மறக்காமல் உங்கள் கருத்துக்களை கருத்து பெட்டியில் சொல்லிவிட்டு செல்லுங்கள். தங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்களை , கருத்துக்களை செம்மைபடுத்த உதவும்.

மதியம் புதன், ஜனவரி 28, 2009
சோ ராமசாமியை எதை வைத்து உதைக்கலாம்., துடைப்பம் கொண்டு?


"துக்களக்" சோ ராமசாமி ஐ பி என் க்கு அளித்த பேட்டியில் கீழ்கண்டவாறு தன் திருவாய் மலர்ந்துள்ளார்...

இந்திய அரசு " இலங்கையில் போரை நிறுத்தும்படி " இலங்கை அரசை நிர்பந்திக்ககூடாதாம். இது இந்தியாவின் நலனை கருதி இவர் சொல்கிறாராம். இவ்வாறு செய்தால் அது விடுதலைப்புலிகளை மீண்டும் பலம் பெற்ற அமைப்பாகவே மாற்றிட உதவிடுமாம். போரை தொடர்ந்து நடத்தி புலிகளை அழித்தொழிக்கவேண்டுமாம். (அப்போதுதானே தமிழர் மீதான தன் நெடுநாள் வெறி வஞ்சம், குரோதம் தீரும்)

அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்திடும் பொருட்டு தானே போர் நிறுத்தத்தை தமிழக கட்சிகள் கேட்கிறது, அது நியாயம் தானே என்ற கேள்விக்கு சோ வின் பதில்:
தமிழக கட்சிகள் அப்படி கோருவது தவறு மட்டுமல்ல, அது உண்மைக்கு புறம்பானதும் கூட. அங்கிருக்கும் தமிழர்களை கொல்வது இலங்கை அரசின் ரானுவம் அல்ல (அம்மாவின் வார்த்தையை அப்படியே பின்பற்றுகிறாராம்..), விடுதலைப்புலிகள் தான் தமிழர்களை கொலைக்கு காரணம். இலங்கை ராணுவம் தமிழர்கள் நலன் கருதி???#$##$ , அவர்களை போர் எல்லையை விட்டு வரும்படி சொல்கிறது., அவர்களுக்கு பாதுகாப்பு மிக்க இடங்களை அளிக்கிறது, (அப்போ முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையத்தில் குண்டு போட்டு 300 தமிழர்கள் கொல்லப்பட்டது?) ஆனால், விடுதலைப்புலிகள் தான் தமிழர்களை அங்கிருந்து போகவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. தங்களை காத்துக்கொள்ள இவர்களை கேடயமாக ஆக்கியுள்ளது.பிரபாகரனை பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சோ -
ஆம், அப்படி கேட்கவேண்டும், ஆனால் செயல்படுத்தக்கூடாது. நான் அந்த பொறுப்பில் இருந்தால் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கேட்பேன் (ஆவனங்களில் அந்த கோரிக்கை இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக) மற்றபடி பிரபாகரனை இங்கு கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டேன்.. ஏனென்றால், இங்கே கொண்டு வந்து சிறை பிடித்து, வழக்கு நடத்தினால், அது நீன்ட காலம் போகும், மேலும் அதுவே தமிழக மக்களிடம் ஒரு அனுதாப உணர்வையும், பிரபாகரன் மேல் ஏற்படுத்திவிடும் ஆகவே கோருவேன் ஆனால் நடைமுறைப்படுத்தமாட்டேன்..(என்ன ஒரு ராஜதந்திர ரெட்டை வேடம் பாருடா.. அப்படி நினைக்கறவன் எதுக்கு ஆவனங்களுக்காக மட்டும் அப்படி கோரவேண்டும்.. )
இந்திய அரசு இலங்கைக்கு உதவ வேண்டுமா என்ற கேள்விக்கு சோ -ஆம், இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும், வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து உதவவில்லை என்றாலும், (வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து.. ..?? என்ன ஒரு விஷத்தனம் சோவிற்கு..) வேறு வழிகளில் எல்லைக்குட்பட்டு , இலங்கைக்கு உதவிட வேண்டும், இதன் மூலம் விடுதலைப்புலி அமைப்பை ஒழித்திட வேண்டும். முழுவதுமாக இல்லாவிட்டலும், அவர்களின் பலத்தை, ஆயுத பலத்தை, படை பலத்தை அழித்து, அது ஒரு தீவிரவாத அமைப்பு என்ற அளவில் மட்டும் நடமாட விடவேண்டும், இது இந்தியா, இலங்கை, இலங்கை தமிழர் (தமிழர் மீது என்ன ஒரு பாசம் இவருக்கு... புல்லரிக்குது)அனைவருக்கும் நல்லது.. (இதை சொல்லும் போது தான் சோவின் முகத்தில் அத்தனை பிரகாசம்)

சோ ராமசாமியை எது கொண்டு அடித்தால் சரியாக இருக்கும்??வயல் வெளியில் விதைத்தவர் முரளி at 0 கருத்துக்கள்

Labels: சோ


மதியம் செவ்வாய், ஜனவரி 13, 2009
எமனை எட்டி உதைத்த "வில்லு" விஜய்.

எமனை எட்டி உதைத்த வில்லு விஜய்.

சமீபகாலமாக விஜய்யின் படங்கள் "மொக்கை பதிவுகள்" வரிசையில் இடம்பெறுவதாக மட்டுமே உள்ளது. குறிப்பாக அவரின் கடந்த 3 படங்கள் அழகிய தமிழ் மகன், குருவி வில்லு என்ற எந்த படமும் சோபிக்கவில்லை.

ஆனால் அ த ம , குருவி தயாரிப்பாளர்கள் இந்த படத்திற்கு எல்லாம் வெற்றிவிழா கொண்டாடியது தனிக்கதை..

இப்பொதெல்லாம் விஜய் நடிக்கும் படம் ஓடுகிறதோ இல்லையோ, அவர் படம் வெளிவரும் போதெல்லாம் அவரை கின்டலடித்து ரீலீஸ் ஆகும் எஸ் எம் எஸ் எல்லாமே சக்கை போடு போடுகிறது.. 200, 300 நாட்கள் அவை வெற்றிகரமாக ஓடுகிறது. பேசாமல் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு விஜய எஸ் எம் எஸில் நடிப்பது எப்படி என்று ஆராயலாம்..

தல அஜித்துக்கும் இதே நிலை தான்.. பாவம்.. தல படம் வரும் போது இளைய தளபதியின் ரசிகர்கள் இப்படிப்பட்ட எஸ் எம் எஸ் களை பரப்பவுது, இ.தளபதி படத்தின் போது தல ரசிகர்கள் இப்படி பரப்புவது வாடிக்கையாகிவிட்டது..

வழக்கம் போல இப்போதும் வில்லு பட ரிலிஸ் நேரத்தில் விஜய் பற்றி காமெடி எஸ் எம் எஸ்கள் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளது.. அதில் குறிப்பாக ஒன்றை படித்து சிரித்தேன்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ.... தலைப்பு அந்த எஸ் எம் எஸ் பற்றியதே..

முதல் எஸ் எம் எஸ் -

தளபதியின் அண்ணன் திருமங்கலத்தில் அடிச்சார் ஆட்ரிக்.. எங்கள் இளைய தளபதி அடிச்சார் ஆட்ரிக் கோடம்பாக்கத்தில்.. தொடர் தோல்வி பாரீர் ஏ டி எம், குருவி, வில்லு..

இரன்டாம் எஸ் எம் எஸ்

எமன் - விஜய் , உங்க நேரம் முடிஞ்சுப்போச்சு, மேலோகத்துக்கா உங்கள கூட்டிட்டு போக வந்திருக்கேன்..

இ. தளபதி விஜய் - அய்யோ அண்ணா, என்னங்கன்னா இவ்ளொ சீக்கிரமா கூப்பிடுறீங்க..

எமன் - எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. சரி உன் கடைசி என்ன சொல்லுங்க..

இ. தளபதி விஜய் - வேற ஒன்னும் இல்லைங்கன்னா.. நீங்களும் நானும் சேர்ந்து ஒரு தடவை கடைசியா வில்லு படத்த பார்க்கனும்னா..

எமன் - அடங்கொய்யாலே.. நான் உன் டைம் முடிஞ்சு கூட்டிட்டு போக வந்தா , நீ என்னைய கொல்லவே ப்ளான் போட்டுடீயா.. விடு ஜீட்.. எஸ்கேப்...
பின்னங்கால் பிடறியில் அடிக்க எமன் ஓட,

வயல் வெளியில் விதைத்தவர் முரளி at 3 கருத்துக்கள்

Labels: எஸ் எம் எஸ், விஜய், வில்லு


மதியம் ஞாயிறு, ஜனவரி 11, 2009
திருமங்கலைத்தை தி மு க கைப்பற்றியது

திருமங்கலைத்தை தி மு க கைப்பற்றியது

தி மு க வின் லதா அதியமான் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. அ தி மு க , தே மு தி க மன்னை கவ்வியது..

சரத்தின் கட்சி 1000 வாக்குகள் கூட வாங்கவில்லை..

தி மு க வினர் தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்..

சட்டசபையில் எதிர்கட்சி வரிசையில் 1 குறைந்து, தி மு க வில் 1 அதிகமானது.. ஏற்கனவே மதுரை மேற்கில் அ தி மு க விடமிருந்து தி மு க கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது..

வயல் வெளியில் விதைத்தவர் முரளி at 0 கருத்துக்கள்திருமங்கலம் ரிஸல்ட்

89% வாக்குகள் பதிவான திருமங்கலம் இடைத்தேர்தல் வாக்கு என்னிக்கை இன்று காலை சுமார் 8 மனியளவில் தொடங்கியது.
இதுவரை என்னிமுடிக்கப்பட்ட 7 சுற்றின் முடிவின் தி மு க வே வெற்றி முகத்தில் உள்ளது, தி மு க சுமார் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் முந்துகிறது. இதே போக்கில் சென்றால் தி மு க 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும் என்று தெரிகிறது.
தி மு க - 42,700
அதி மு க 20,300
அ தி மு க கடும் போட்டி தரும் என்று தான் ம தி மு க விடமிருந்து தொகுதியை கைப்பற்றியது.. ஆனால், இந்த நிலைக்கு ம தி மு க வே போட்டியிட்டு இருக்கலாம் என ம தி மு க வினர் நினைக்கின்றனர்..
வைகோ நன்றாக ஏமாந்துவிட்டார்..

வயல் வெளியில் விதைத்தவர் முரளி at 5 கருத்துக்கள்

Labels: திருமஙலம்


மதியம் வியாழன், ஜனவரி 8, 2009
"மன்மோகன்சிங்" தலைவலி - சென்னையில் இன்று பரவியது.

அட நம்புங்க.. சென்னை மக்களில் சிலருக்கு இன்று ஒரு புதுவித தலைவலி வந்தது ஆமாம் .. மன்மோகன்சிங் தலைவலி.. எனக்கும் இந்த புதுவிதமான தலைவலி வந்திருக்குங்க.. இந்த தலைவலி வந்தா கூடவே செம கடுப்பும் வரும்..

சென்னையின் போருர் பூந்தமல்லி, ராமாபுரம், கின்டி, சைதை மதுரவாயல் பகுதிகளில் வாழும் பலரை இந்த தலைவலி இன்று காலை தாக்கியது..

சென்னை மனப்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீட்டிங் நடந்துட்டு வருது.. இதை முறைப்படி துவக்கி வைக்க நம்ம மன்மோகன்சிங் வந்தார்.. (அப்புறம் நேற்று யாரோ ஒரு மந்திரி வந்து என்னத்த பன்னிட்டு போனாருனு தெரியல..வரு முறையில்லாம தொடக்கி வெச்சுட்டு போனார் போல இருக்கு)

இவரு காலை 9 முதல் 10 வரை இந்த முறைப்படி தொடங்கிவைப்பு நடத்திட்டு , அங்கே இருந்து மதுரவாயல் போயி அங்கே மிக நீள பாலத்துக்கு அடிக்கல் நாட்டனும்னு நிகழ்ச்சி நிரல்..

இதை முன்னிட்டு, அய்யா வர ரூட்ல் எல்லாம் 9.40 ல இருந்து கம்ப்ளீட் போக்குவரத்து நிறுத்தம்.. இந்த பக்கம் அந்த பக்கம் எந்த பக்கமும் வழியில்ல.. போரூர் ரவுண்டானா சிக்னல் சந்திப்பு முற்றிலும் முடக்கபட்டது... ராமாபுரம் , முகலிவாக்கம் சாலைகள் மூடப்படட்து.. பூந்தமல்லி - ஐய்யப்ந்தாங்கல் இருந்து வரும் வாகனங்கள் போருர் ராமச்சந்திராவில் மடக்கபட்டு அந்த வழித்தளமும் முற்றிலும் முடக்கப்பட்டது..

ஒட்டுமொத்தமாக சென்னையின் ஒரு பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது அதுவும் காலை 9.50 மனிக்கு.. எப்படிப்பட்ட பாதிப்பு இருந்திருக்கும்??

அலுவலகம் செல்பவர்கள்.. முக்கிய வேலையாக செல்பவர்கள்.. நோயாளிகள்.. குழந்தைகள்... அனைவரும் வேகாத வெயிலில் திக்கி தினறி வேர்க்க விருவிருக்க நிற்கவைக்கப்பட்டனர்.. ஏதோ 10, 20 நிமிடம் என்று நினைத்திட வேன்டாம்.. சுமார் 1 மனி 20 நிமிடங்கள்..

அவர் நிகழ்ச்சி நிரல் படி, 10 மணிக்கு வர்த்தக மையம் நிகழ்ச்சி முடித்து மதுரவாயலுக்கு அவர் போருர் வழியாக செல்லவேண்டும்.. எப்படிப்பார்த்தாலும் 15 நிமிடத்திற்குள் அவர் மதுரவாயம் சென்றிருக்கலாம்.. ஆனால் நம் மதிப்புற்குரிய பிரதமர் 10.45 க்கு தான் போரூரை கடந்தார்..
இதன் காரணமாக 9.45 ஆங்காங்கே நிறுத்தப்பட்ட போக்குவரத்து 11.05 க்கு தான் மீண்டும் இயங்கியது..

ஒரு பக்கம் சிறிது வெயில் கலந்த புழுக்கமான வானிலை, வாகன சத்தம்.. எல்லாம் சேர்ந்து பலருக்கும் வந்தது தான் இந்த மன்மோகன்சிங் தலைவலி..
காட்டுப்பாக்கத்தில் இந்த நெரிசலில்ல் சிக்கிய ஒரு ஆம்புலன்சின் தொடர் சைரன்.. அந்த வன்டியின் இருந்த நோயாளியின் உறவினர்கள் மன்மோகனை கெட்ட வார்த்தையில் திட்ட்டியதை போல இருந்தது.. கடுப்புல ஜனங்க நல்ல கரிச்சு கொட்டிட்டு போனது பார்க்கமுடிந்தது..

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் இப்படித்தான் இருக்கும்.. கருணாநிதி பரவாயில்லை..கருணாநிதி போகும் போது 10, 15 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி பார்த்து இல்லை

இந்த அரசியல்வாதிங்களுக்கு உயிர் மேல அவ்ளோ பயம்.. இது டயலாக் விடுவானுங்க உயிர் மக்களுக்கு ம...க்குனு...

தங்களின் பிரச்சனையை தீர்க்க கோரி பொதுமக்கள் போக்குவரத்தை தடை செய்தால் அதற்கு பெயர் சாலை மறியல், கைது..அதையே இந்த நாய்கள் யூனிபார்ம், கரை வேட்டி போட்டு செயதால், அதற்கு பெயர் பாதுகாப்பு..

அரசியல் ஜால்ராக்களை சொல்லனும்.. கட் அவுட் வெச்சு , கொடி நட்டு.. வழி நெடுக நின்னுட்டு இருந்தானுங்க பாருங்க இளிச்சிக்கிட்டு .. லூசுங்களா.. உங்க சொந்தகாரனும் அந்த போக்குவரத்து நெரிசல்ல ஒரு நாள் மாட்டுவான்டா.. ஆஸ்புத்திரி போக முடியாம இழுத்துகிட்டு இருப்பான். அப்போ தெரியும் உங்களுக்கு..

அப்படி என்ன பயம் உனக்கு. அந்த ம.....ருக்கு எதுக்கு வெளிய வரனும்.. இப்போதான் டெக்னாலஜி ல வீடியோ கான்பரன்சிங் இருக்கு.. இந்த சிங் அந்த கான்பரன்சிங் வழியா இந்த மீட்டிங்க முறையா துவக்கியிருக்கலாம் ல.. அத விட்டுட்டு எங்க காசை செலவு பன்னி நீ இங்க வந்து . இந்த மீட்டீங்க்க தொடங்கி வெக்கனுமா?

இல்லை பயந்து பயந்து வ்ர புலி மதியான 2, 3 மனிக்கு வந்து தொறந்து வெச்சுட்டு, அடிக்கல்ல நாட்டிட்டு போறது தானே..

தெரியாம தான் கேட்கிறேன்.. நீங்க தமிழ்நாட்டுக்கு வரல யாரு அழுதா??

குய்யோ முய்யோ நு கத்துறோம்.. தமிழன காப்பத்துங்கனு, அத ஒரு ம்சுரும் காதுல போட்டுக்கல.. எதை தொடங்கி வெக்கவும், தொறந்தவெக்கவும் மட்டும் தொரை கிளம்பி வந்துட்டாரு பெருசா.. எங்க வயத்தெரிச்சல கொட்டிக்க..

என்ன நடவடிக்கை எடுக்கல அதான் ப்ரனாப் போவார்னு சொல்லிட்டாங்களேனு யாரும் கேட்டுகிட்டு வராதீங்க.. வெளக்கென்னல போவாரு ப்ரனாப்... சொல்லி எவ்ளோநாள் இன்னுமா டிக்கெட் கிடைக்கல? இல்லை ப்ரனாப் இங்கே அவர் துறைல கிழிச்சுகிட்டு இருக்கிறாரா. என்னய்யா இது.. யார்கிட்ட அளக்கறீங்க??

உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரில இருக்கான்டா போய் காப்பத்துங்கனு சொன்னா.. போறோம். போறோம் நு சொல்லி அவ்னோட காரியத்துக்கு போவீங்களாடா முன்டங்களா..

இன்னும் 3 மாசத்துல எலக்ஷன் வருது.. அப்போ ஓட்டு பொறுக்க மட்டும் வந்தா போதாதா.. இப்போ எதுக்கு வந்து எங்க கழுத்த அறுக்கறீங்க??

வயல் வெளியில் விதைத்தவர் முரளி at 8 கருத்துக்கள்

Labels: தலைவலி, மன்மோகன்சிங்


மதியம் புதன், டிசம்பர் 24, 2008
தமிழக மதுக்கடைகள் - மதுவிலக்கு - முதல்வர் புது முடிவு

தமிழகத்தில் பூரணமதுவிலக்கு வேண்டும் என்று சிலகாலமாவே பா ம க ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.. இது தொடர்பாக பா ம க பல்வேறு போராட்டங்களும் நடத்திவருகிறது..

குறிப்பாக அக்டோபரில் நடந்த மகளிரனியினரின் மது பாட்டில உடைப்பு போராட்டத்தில், உற்சாக மிகுதியில் ஒரு குளிர்ந்த பீரை மடக் மடக் என்று உள்ளே தள்ளிவிட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டு கலக்கினார்.. அது ஒரு பக்கம்..

இதனிடையில், இது தொடர்பாக முதல்வரை , ராமதாஸ் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் 2 நாட்களுக்கு சந்தித்து பேசினர்.. படிப்படியான நடவடிக்கைகள் எடுப்பதாக முதல்வரும் உறுதியளித்தார்...
அதை தொடர்ந்து முதல்வர் முதல் கட்டமாக மதுபான கடைகள் (டாஸ்மாக்) தொடர்பாக இரண்டு முடிவுகளை அறிவித்துள்ளார்..

1. ஜனவரி 1, 2009 முதல் டாஸ்மாக் விறபனை நேரம் 1 மனி நேரம் குறைக்கப்படுகிறது..காலை 10 முதல் இரவு 11 வரை திறந்திருந்த கடைகள் இனி காலை 10 முதல் இரவு 10 மனி வரை மட்டும் திறந்திருக்கும்.

2. புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது.

நல்ல விஷயங்கள். இதனால் பெரிய அளவில் மாற்றம் இராது எனினும், இது மதுவிலக்கை நோக்கிய முதல் படி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

முதல்வர் விரைவில் மேலும் பல முடிவுகளை எடுக்கவேண்டும்..இருக்கின்ற கடைகளில் குறைந்தது பாதியையாவது அடுத்த ஆண்டு இறுதிக்குள் மூடிட நடவடிக்கை வேண்டும்.. மேலும் கடை நேரத்தை 6 மனி நேரம் என்ற அளவுக்கு குறைத்திட வேண்டும்.

நடக்குமா என்று பொருத்திறுந்து பார்க்கலாம்..

எப்படியோ, இந்த அறிவிப்பு, தி மு க - பா ம க உறசலை ஓரளவாவது குறைக்க உதவும்..

வயல் வெளியில் விதைத்தவர் முரளி at 1 கருத்துக்கள்

Labels: மதுக்கடைகள், மதுவிலக்கு


மதியம் செவ்வாய், டிசம்பர் 23, 2008
எங்கும் தமிழ் , எதிலும் தமிழ்.. ஏங்கும் தமிழ்

....That was really a fantastic and awsome performance. mind blowing and wonderful. keep it up.
ஸ்ருதி கொஞ்சம் miss ஆச்சு but then you adjusted to it well .
...........especially the சரணம் was so great. you kept the tempo very well. you have wonderful voice.. you are gifted..
....no doubt it is a splendid performance. but you know, you have to focus more on your sruthi.. somewhere in the sequence it trembles. well, with that saying, you are in the safe zone.
.. ... you need to practise more ma. you know the upcoming rounds are going to the very competetive and tough so நன்னா practise பன்னுங்க. all the best
.. இன்னிக்கு உங்க peformance கொஞ்சம் dull தான்.. என்ன problem , you didnt you do well today. you didnt have the confidence. நீங்க confidence வெச்சு பாடல.. நான் சொல்றது correcta?
.... you have to be confident in your singing. இன்னும் நல்லா try பன்னனும்.. just relax and give a hit next time with 100 percent confidence. better luck next time. sorry , you are moved to risk zone..

......alrite, நம்ம judges கொடுத்த comments பார்த்தோம்.. with that note, lets go in for a short commerical break.. dont go away.. will catch you at the other end of the break..

இது ஏதோ, சி என் என் , ஐ பி என் அல்லது பி பி சி யில் வரும் நிகழ்ச்சியில் வரும் உரையாடல் இல்லை..

சாட்சாத் நம்ம தமிழ் தொலைக்காட்சியாம் விஜய் டீவியில் வரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் நம் நடுவர்களின் உரையாடலே.

விஜய் டீவி என்று இல்லை.. அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதே நிலைதான்.. குறிப்பாக நடுவர்கள் பங்கேற்கும் அனேக நிகழ்ச்சிகள் இப்படித்தான் இருக்கிறது..

இன்றைய சூழலில் ஆங்கிலம் கலக்காது பேசுவது என்பது தவிர்க்க இயலாதது. நாம் கூட பதிவுகளில் பல இடங்களில் ஆங்கில கலப்புடன் தான் எழுதுகிறோம்..

ஆனால், இந்த நடுவர்கள் இப்படி 95% ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதை தவிர்க்கலாமே.. ஆங்கில கலப்புக்கும், ஆங்கில ஆக்கிரமிப்புக்கும் வித்தியாசத்தை உணர்ந்து, இது ஒரு தமிழ் நிகழ்ச்சி.. தமிழர்கள் அதிகம் பார்க்கின்ற நிகழ்ச்சி என்ற அளவில் அவர்கள் ஆங்கிலத்தை சற்று குறைத்துக்கொள்ளலாம்..

தொகுப்பாளினிகளில் ஆரம்பித்து, மெதுவாக நடுவர்களை அடைந்து உள்ள இந்த வழக்கம்..இப்போது தமிழ் தொடர்களையும் பற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது.. இப்படியே போனால், விரைவில் அனைத்து தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் தமிழில் சப் டைடில்!! :) போடும் நிலை வரலாம்.. அல்லது தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழில் வசனங்கள் இருந்தால் ஏதேச்சும் வரி விலக்கு என்று அறிவிப்பு செய்ய வேண்டியும் வரலாம்.

வயல் வெளியில் விதைத்தவர் முரளி at 12:20 10 கருத்துக்கள்

Labels: தமிழ்


Older Posts Subscribe to: Posts (Atom)

Wrong poll number!
என்னை பற்றி சில வரிகள்
முரளி
சென்னைவாசி, எழுத்தாளன் கிடையாது, எழுதுவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால், இந்த வயல் வெளியை ஏற்படுத்தியுள்ளேன்.
View my complete profile
வயல் வெளியில் நீங்கள் உலவும் (இந்திய) நேரம் சரியாக

வயல் வெளிக்கு இதுவரை வந்தவர் :

முந்தைய அறுவடைகள்
மதியம் ஜனவரி (5)
மதியம் டிசம்பர் (4)
மதியம் நவம்பர் (9)
மதியம் அக்டோபர் (7)
மதியம் ஜூன் (6)
மதியம் மே (3)
மதியம் ஏப்ரல் (3)
மதியம் மார்ச் (4)
மதியம் பிப்ரவரி (5)
மதியம் ஜனவரி (3)
Labels
Letter to PM (1)
PIT (2)
thatstamil (1)
அசின் (1)
அத்வானி (1)
அமெரிக்கா (1)
அறிக்கை (1)
ஆரம்பம் (1)
இந்தியா (1)
இந்திராகாந்தி (1)
இனப்படுகொலை (1)
இலங்கை (2)
இளையராஜா (1)
ஈ வி கே எஸ் (1)
எஸ் எம் எஸ் (1)
ஒகனேக்கல் (1)
ஒபாமா (1)
ஒரு நிமிட கதை (1)
ஓ பக்கங்கள் (1)
கருணாநிதி (1)
கலைஞர் (1)
கலைஞர் அரசு (1)
காமெடி (1)
கிரிக்கெட் (1)
குமுதம் (2)
குமுதம் ரிப்போர்ட்டர் (1)
கேமரா மொபைல் (1)
கேலிச்சித்திரம் (1)
கோணங்கி கோபாலு; (1)
சண்முகநாதன் (1)
சம்யுக்தா (1)
சர்வே (1)
சாமி (1)
சாஸ்திர சம்பிரதாய சடங்கு (1)
சிங்கங்கள் (1)
சின்னப்புள்ளத்தனம் (1)
சிரஞ்சீவி (1)
சீமான் (1)
சூப்பர் ஸ்டார் (2)
சோ (1)
ஜப்பான் கார் (1)
ஜெ (2)
ஞாநி (1)
டோண்டு (1)
டோண்டு ராகவன் (1)
தசாவதாரம் (2)
தமிழக காங்கிரஸ் (1)
தமிழ் (2)
தலைவலி (1)
திருமஙலம் (1)
திருமா (1)
திரைப்பட பெயர்கள் (1)
தீர்ப்பு (1)
நவீன திருட்டு (1)
நிவாரன பொருட்கள் (1)
பத்திரப்பதிவு மோசடி (1)
பா ஜ க (1)
பிறந்தநாள் வாழ்த்து (1)
புகைப்பட போட்டி (1)
புஷ் (1)
பெட்ரோல் (1)
பெரியார் (1)
பொண்முடி (1)
ப்ளீசிங் பவுடுடர் (1)
மதம் (1)
மதிமுக (1)
மதுக்கடைகள் (1)
மதுவிலக்கு (1)
மத்திய அரசு (1)
மன்டல மாநாடு (1)
மன்மோகன்சிங் (1)
மாற்று எரிபொருள் (1)
மாலைமலர் (1)
மிஸ் சென்னை (1)
மொக்கை (1)
மொழிபெயர்ப்பு (1)
மோடி (1)
ரஜினிகாந்த் (2)
ராஜசேகர் (1)
ராஜிவ்காந்தி (1)
ராம்ஸ்க்கு கடிதம் (2)
வலைப்பதிவர் (1)
வலைப்பதிவர்களுக்கு எச்சரிக்கை (1)
விசயகாந்த் (1)
விஜய் (1)
விடுதலைப்புலிகள் (1)
வில்லு (1)
வைகோ (1)
திரட்டிகள்சமீபத்தில் கருத்து விதை விதைத்தவர்கள்
On Jan 28 M. commented on blog post_2081: “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது... எது நடக்குமோ…”

On Jan 28 Anonymous commented on blog post_2081: “thats our power! power of india”

On Jan 28 Anonymous commented on blog post_28: “சோ ஒருபோதும் இலங்கை தமிழருக்கு விரோதமாகமான கருத்தை தெரிவித்ததில்லை.”

On Jan 28 முரளி commented on blog post_28: “மதி , நீங்கள் சொல்வது போன்ற ஒரு ஆதரவு வரி எங்கே இருக்கிறது என்று காட்ட முடியுமா?”

On Jan 28 முரளி commented on blog post_28: “Mr Anony, Thanks . I do not have to worry this is not a terrorism support post.. this post talks…”


Add this widget to your blog
வயல் வெளியில் உலாவினோர்
Live Traffic Feed
Sorry, but Feedjit will not load on websites who use an IP address as their domain name or on web pages that are a search engine's cached page. Please see our FAQ for more info.
Click to get FEEDJIT


வயல் வெளிக்கு வந்த வழி
tamilmaNam.NET : Tam... [3144]
thamizmaNam : Tamil ... [1864]
Google [311]
Tamil Tamilveli.com ... [292]
Thiratti.com - Tamil... [109]
Blogger: Private [106]
?????? ! - Tamil Blo... [8]
Tamilish - ??????? ... [8]
awards2008.tamilmana... [6]
TAMIL.KANIMAI.COM - ... [6]
feedjit.com [3]
tamil.sg [3]
link-pedia.com [2]
tamilmaNam.NET : Tam... [2]
tamilblogs.com [1]

5,865

www.e-referrer.com

வருகைக்கு நன்றி, மறவாமல் தங்கள் கருத்தினை பதித்துவிட்டு செல்லவும்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails