பிரணாப் முகர்ஜி இதுவரை இலங்கைக்கு செல்லாதது ஏன்?: டி.இராஜேந்தர் கேள்வி

இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அந்நாட்டுக்குச் செல்வார் என்று கூறப்பட்டது. இதுவரை அவர் செல்லாதது ஏன்? என்று இலட்சிய திராவிட முன்னேன்ற்ற கழக தலைவர் விஜய டி. இராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி சென்றது. பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசியபோது, பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்வார் என அவர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை உடனடியாக ஆவன செய்வதாக பிரதமரும் வாக்களித்தார்.

ஆனால் ஒரு மாதம் கழிந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியை சிங்களப் படை முற்றுகையிட்டுள்ளது. இதைத்தான் இந்திய அரசு எதிர்பார்த்ததா? அதற்காகத்தான் காலம் தாழ்த்தியதா? வெறியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி செல்வதற்கு விமானம் கிடைக்கவில்லையா? இல்லை தமிழனுக்கு உதவ மனம்தான் இல்லையா? இலங்கைக்கு என் அவகாசம் கொடுத்தீர்கள். மாநில அரசிடமும், தமிழக மக்களிடமும் ஏன் நாடகம் ஆடினீர்கள்? இலங்கைக்கு சாதகமாகவும், தமிழருக்கு பாதகமாகவும் நடந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.

கிளிநொச்சியை இழந்து இலங்கையில் தமிழன் அமங்கலமாய் இருக்கையில், இங்கே திருமங்கலத்தில் தேர்தலுக்காக தலைவர்கள் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் அணி மாற தயராய் நிற்கிறார்கள். ஆனால் இலங்கைத் தமிழனுக்காக அணிவகுத்து நிற்க யார் இருக்கிறார்கள். என்றார் டி.இராஜேந்தர்.


நன்றி - தமிழ்வின்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails