தமிழருக்காக ஓபாமா இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்
Posted On Monday, 5 January 2009 at at 11:14 by Mikeதமிழருக்காக ஓபாமா இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்த தீர்வு நல்ல தீர்வாக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு "இலங்கையில் இருந்து பிரிந்து ஒரு தனிநாட்டை அமைப்பது" என கலந்து கொண்டு வாக்களித்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழருக்காக ஒபாமா இணையத்தளம் ஒன்பது கேள்விகளைக் கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றினை பல நாட்களாக நடத்தியது. இதில் பல தமிழர்கள் கலந்து கொண்டு இணையத்தளம் ஊடாக வாக்களித்தார்கள்.
கருத்துக்கணிப்பு முடிவுகள்....
http://www.tamilseythi.com/tamilar/tamilsforobama-2009-01-03.html
இலங்கைக்கு சமாதானத் தூதரக ஒருவரை அனுப்புவதாக இருந்தால் யாரை தெரிவு செய்ய வேண்டும்? என கேட்கப்பட்ட கேள்விக்கு வட அயர்லாந்திற்கும் மத்திய கிழக்கிக்குமான சமாதான தூதுவர் ஜோர்ச் மிச்சல் செயற்படலாம் என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.