போர்க்களத்தில புலிகளுடன் இணைந்து நிற்கும் மக்கள்-பதுங்கும் பக்சே:நக்கீரன்

""ஹலோ தலைவரே... ...தமிழர் திருநாளான பொங்க லுடன் தமிழ்ப்புத்தாண்டும் சேர்ந்து கொண்டாடப்பட்ட இந்த ஆண்டில் ஒரேயொரு விஷயம் மட்டும் தமிழர்களை உறுத்திக் கொண்டேதான் இருந்தது.''

""ஈழநிலவரத்தைத்தானே சொல்றே!''

""ஆமாங்க தலைவரே... முதல்வர்கூட தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் இதை வருத்தத்துடன் குறிப் பிட்டு, அடுத்த ஆண்டு அமெரிக்க சுதந்திர தினவிழா போல வாணவேடிக்கையுடன் தமிழ்ப்புத்தாண்டைக் கொண் டாடணும்னு சொல்லியிருக் கிறார். ஈழ நிலவரம் தொடர்பா கொழும்பு சோர்ஸ்களிடமிருந்து புதிய தகவல்கள் கிடைத்திருக்கு. யாழ்ப்பாணம் மாவட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக் குள் முழுமையாகக் கொண்டு வந்துவிட்ட தாகச் சொல்லும் சிங்கள அரசு, ஏ-9 நெடுஞ்சாலையை க்ளியர் பண்ணி போக்கு வரத்துக்கான ஏற்பாடுகளையும் செய்து கிட்டிருக்கு. இதை தேசிய வெற்றியாகக் சிங்களப் பகுதிகளில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடந்துக்கிட்டிருக்காம்.''

""முல்லைத்தீவு?''

""கிளிநொச்சியையடுத்து அதைத்தான் சிங்கள ராணுவம் கைப்பற்றப்போகுதுங்கிற எதிர்பார்ப்பு இந்திய ஊடகங்களில் அதிகளவில் இருக்குது. கொழும்பு பத்திரிகையாளர்களோ, அது அவ்வளவு சுலபமல்லன்னு சொல்றாங்க. ஏன்னா, முல்லைத்தீவில் சுமார் 5 லட்சம் தமிழர்கள் இப்ப இருக்காங்க. வாழ்வா, சாவாங்கிற இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவர்கள், விடுதலைப்புலிகளோடு இணைந்து சிங்கள ராணுவத்தை சந்திக்கத் தயாராயிட் டாங்களாம். 5 லட்சம் தமிழர்களில் 1 லட்சம் ஆண்களும் பெண்களும் நேரடியா போர்க்களத்தில் இறங்கிட்டால் அது சிங்கள அரசுக்கு பெரும் சவாலான விஷயமாக மாறிவிடும்.''

""அதுமட்டுமில்லப்பா... வீரமரணத் திற்கு மக்கள் தயாராகி, ஆயுதங்களை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டால் எவ்வளவு பெரிய ராணுவமும் எதிர்நிற்க முடியாதுங்கிறதுதான் வரலாறு.சோவியத் யூனியனாகட்டும், செஞ்சீனமாகட்டும், வியட்நாம் போரில் அமெரிக்காவுக்கு கிடைத்த அடியாகட்டும்.. மக்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது உலக வரலாறு.''

""இப்போதுள்ள நிலையில், முல்லைத்தீவில் தஞ்சமடைந்துள்ள ஈழமக்கள் மீது சிங்கள விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினால் அது உலகளாவிய மனித உரிமைப் பிரச்சினையாகவும் மாறக்கூடிய நிலைமை இருக்குது. அதனால, புலிகளோடு இணைந்து நிற்கும் மக்களின் சக்தியை எதிர்கொள்ள சிங்கள அரசு தயங்குது. கிளிநொச்சி வரைக்கும் போனதுபோல இனி போக முடியாது என்பதால், முல்லைத்தீவுக்குள் நேரடியாக நுழைவதில்லைங்கிற நிலைப்பாட்டை ராஜபக்சே அரசு எடுத்திருக்குதாம். அதற்குப் பதிலாக, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத்தை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டோம் என்பதை பெரியளவில் பிரச்சாரம் செய்து, தேசியத் திருவிழாவாகக் கொண்டாடுவதுன்னு முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.''

நன்றி : நக்கீரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails