ஈழத்தில் காந்தி சொன்ன சுதந்திரம்
Posted On Thursday, 22 January 2009 at at 14:10 by Mikeஈழப்பகுதியிலிருந்து இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் பெண் எம்.பி., யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த பத்மினி சிதம்பர நாதன். ஈழத்தில் கடும்போர் தொடர்ந்து வரும்நிலையில், தமிழகத் தலைவர்களை சந்தித்து, ஈழத்தமிழர்களின் வாழ்க்கை நிலையை விளக்கி வரும் இவர், அங்கே தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து நம்மிடம் விரிவாக விளக்கினார்.
""கிளிநொச்சி வெட்டவெளியாக இருக்கிற தென்றால் அதற்கு காரணம், சிங்கள ராணுவம் அடிக்கும் ஷெல்களுக்குப் பயந்து தமிழ் மக்கள் தங்கள் வீடுகளை விட்டுச் சென்றதுதான். வெட்ட வெளிப்பகுதியே இப்போது ராணுவத்திடம் இருக்கிறது. கிளிநொச்சியில் போராளிகளின் செயலகங்கள்தான் இயங்கி வந்தன. புலிகள் அங்கு வந்து வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அந்த செயலகங்கள் இப்போது காலி செய்யப்பட்ட நிலையில்தான், ராணுவத்தினர் நுழைந்துள்ளனர்.
இலங்கையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் தமிழ் மக்கள் மட்டும் அடையாள அட்டைகளை காட்டிச் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. இதை ஈழத்தமிழர்கள் அவமானமாகக் கருதுகிறார்கள்.
நான் ஆசிரியையாக இருந்த 1995 காலகட்டங்களில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த எங்கள் ஈழப் பகுதியில், வேலை முடித்துவிட்டு இரவு 8 மணிக்குப் பிறகு மக்க ளைச் சந்திக்கச் செல்வோம். பொருளாதாரத் தடை இருந்த காரணத்தால் மின்சாரமோ மற்ற வசதி களோ கிடையாது. அப்ப டிப்பட்ட நிலையிலும், நள்ளிரவிலும்கூட பெண்கள் எல்லா இடங்களுக்கும் சென்று வருவோம். இந்தியாவில் காந்தி என்ன சொன் னாரோ அந்த சுதந்திரம் எங்கள் ஈழப்பகுதிகளில் இருந் தது. இன்று சிங்கள அரசின் கட்டுப்பாட்டில், அந்த சுதந் திரம் இல்லை. பழைய சூழலில் மீண்டும் வாழவேண்டும் என்பதே எங்கட சனங்களின் விருப்பம்'' என்ற பத்மினி சிதம்பரநாதன், இப்போது ஈழத்தமிழர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதையும் விளக்கினார்.
""தமிழர்களுக்காக தாய்த்தமிழகத்திலிருந்து இந்திய அரசு அனுப்பிய உணவுப்பொருட் களைத் தருகிறோம்' என்றுசொல்லி, ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த செஞ்சிலுவை சங்கத்தின் உணவுப்பொருட்களை நிறுத்திவிட்டது இலங்கை அரசாங்கம்.
போரினால் சிங்களர்களுக்கும் நெருக்கடி தான். கொழும்பில் விலைவாசி உயர்ந்துவிட்டது. ஒருவேளை உணவை குறைக்க வேண்டிய நிலையில் சிங்களர்கள் உள்ளபோதும், தமிழர் கள் மீதான போருக்காக உணவைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதிலிருந்தே தமிழீழத்தைத் தவிர வேறெந்த தீர்வும் தமிழர்களுக்கு முழு உரிமையைப் பெற்றுத் தராது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். தமிழக மக்களும் தலை வர்களும் ஒருமித்த ஆதரவு வழங்கி னால் ஈழத் தமிழர் களுக்கு நிச்சயம் விடிவு ஏற்படும்'' என்றார் இன்ன மும் நம்பிக்கை குறையாத குரலில்.