வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்
Posted On Wednesday, 7 January 2009 at at 05:15 by Mikeஅழையா விருந்தாளியாக பிரணாப் இருப்பதனால், இந்த உளவு வானூர்திகள் வழியாக செல்ல முயன்றிருப்பாரோ. பாலூ அண்ணன் வேறு அங்கு விருந்து சமைக்க யாருக்கும் தெரியாதாம் அதனால பிரணாப் போக முடியாதுன்னு சொல்லிட்டாரு.
கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணித்து வருகின்றன.
சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உளவு வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்திய உளவு அமைப்பான றோவின் இரகசிய பிரிவுகளில் ஒன்றான வான் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானூர்தி ஜனவரி 3 ஆம் நாள் அதிகாலை 3:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வடபோர்முனையின் கரையோர பகுதிகளை அடைந்து கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இந்த வானூர்தி பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்பாது வேறு வானூர்தி நிலையம் ஒன்றில் தரையிறங்கியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறக்கும் இந்த வானூர்திகளில் துல்லியமாக படங்களை எடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முகில் கூட்டங்களின் ஊடாக தரையில் நடைபெறும் சம்பவங்களை படம் பிடிக்கும் தகமை கொண்ட இந்த ஒளிப்பட சாதனங்கள் சிறிய வாகனங்களையும், மனித நடமாட்டங்களையும் காண்காணிக்க கூடியது.
இந்திய உளவு அமைப்பின் இந்த வான் ஆய்வு மையத்தை சேர்ந்த வானூர்திகளை உளவு நிறுவனங்களை சேர்ந்த வானோடிகளே செலுத்துவதுண்டு, அதனை வான்படை வானோடிகள் செலுத்துவதில்லை.
மேலும் அவை குறிப்பிட்ட ஒரு நிலையத்தை பயன்படுத்துவது கிடையாது, பொதுமக்கள் பயன்படுத்தும் வானூர்தி நிலையங்களையும், வான்படையின் நிலையங்களையும் மாறி மாறி பயன்படுத்துவது உண்டு.
இதனிடையே, வான் ஆய்வு மையத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக தமக்கு சிறிதளவான தகவல்கள் தெரியும் என சென்னை வானூர்தி நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேறு ஒரு நிலையத்தில் இருந்து வந்த வானூர்தி ஒன்றே சென்னை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பண்ண வேண்டிய வேலைய வேற இடத்தில் பண்றது கொஞ்சம்கூட நல்லா இல்ல! நம் பாரத நாட்டிற்கு அச்சுறுத்தல் பாகிஸ்தான் தவிர வேற எந்த மண்ணும் இல்ல.
பாகிஸ்தானில் ட்ரயல் பார்க்க முடியாதுல்ல அதுனால தான்.