பரந்தனில் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம்

கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:00 மணி தொடக்கம் மும்முனை முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுகளுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி இன்று பிற்பகல் படையினரின் நகர்வுகளை முறியடித்தனர்.

இதில் சிறிலங்கா படையினர் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

பிகே எல்எம்ஜி - 01
ஏகே எல்எம்ஜி - 01
ஆர்பிஜி - 01
ரி-56 ரக துப்பாக்கிகள் - 04

உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

thanks
http://puthinam.com/full.php?2bb7D6CAb0acAAmSI00eccAYcm30cc300Mtt24d235Vo644b33OOO444d4eIOA4cdd0eeWe1ffde

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails