குண்டு மழையில் தமிழன் சாக.... மகிந்தவுக்கோ ரணில் பாராட்டு "மழை"
Posted On Tuesday, 27 January 2009 at at 11:15 by Mikeதமிழக அரசியல் வாதிகளே கற்று கொள்ளுங்கள் இவனிடமிருந்து, மகிந்த மக்களை கொன்னாலும் அவனை பாராட்டுறான். இங்கோ தமிழனை காப்பாற்றுவதில் என்ன ஒரு தில்லு,முல்லு, சுயநல அரசியல்.
அப்பாவி தமிழ் மக்களை எறிகணை மழைகள் மூலம் கொன்று குவித்து தமிழர் தாயக நிலங்களை விழுங்கி வரும் சிறிலங்கா இராணுவத்துக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பாராட்டு "மழையை" பொழிந்திருக்கின்றது.
இது தொடர்பாக ஐ.தே.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடபகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் சாதனையை பாராட்டுகின்றோம்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் புலிகளிடமிருந்த முக்கிய நகரங்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது முதல் இப்போது வடபகுதி முழுமையும் சிறிலங்காவின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு வழி போரியல் தன்மையை உடைத்திருக்கின்றது சிறிலங்கா அரசாங்கம்.
இந்த நாட்டின் இறைமையும் பிரதேச ஒற்றுமையும் இப்போது பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
இந்த வெற்றிக்கு காரணமான சிறிலங்கா அரச தலைவர். பிரதமர் மற்றும் அமைச்சர்களைப் பாராட்டுகின்றோம் என்று ஐ.தே.க. பாராட்டு மழை பொழிந்திருக்கின்றது.
பிராணப் மகிந்தா கொடுக்கும் பியரை அடித்துவிட்டு கிறிக்கெட் பார்த்துவிட்டு வருவார். பொன்சேகா தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கோமாளி என்று சொல்லுவார்.