புஷ்க்கு கிடைத்த பரிசு : நன்றி பதிவு(pathivu.com)

ஜனாதிபதியின் எட்டாண்டு காலத்தை கடந்து விடைபெறவுள்ள

உலக வல்லரசு நாடுகளின் 43வது குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ்க்கு டிசம்பர் மாதம் 13ம் திகதி வாழ்வில் மறக்க முடியாத நாள். 13ம் இலக்கம் என்றாலே அனைவராலும் குறிப்பாக வெள்ளையர்களினால் ஒதுக்கப்படும் இலக்கமாகும். அதுவே புஷக்கு கெட்டநாளாகிவிட்டது.

2001ம் ஆண்டு செப்தம்பர் மாதம் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து சீற்றம் கொண்ட அமெரிக்கா தனது ஏகாதிக்கத்தை ஆப்கான் தொடக்கம் ஈராக் வரை ஏவிவிட்டது. ஈராக் ஜனாதிபதி உட்பட ஏராளமான பொதுமக்களை கொன்றுகுவித்த அமெரிக்க படைகள் இன்று அந்த நாட்டு ஜனாதிபதி எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்து நிறைபெறவுள்ள இன்னும் ஒரிரு நாட்களுக்குள் கிடைத்த பரிசு செருப்பெறியாகும்.

அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியான தந்தை ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், தம்பி புளோரிட மானில ஆளுநர். பரம்பரை அரசியல் வாதியான இவர் செருப்பெறிவாங்குளவுக்கு ஆட்சி செய்துள்ளார்.

பாதணியினால் எறிந்த ஊடகவியலாளர் முன்டஸிர் அல் சைதிக் அமெரிக்காவை பொறுத்தவரையில் எதிரி அல்லது குற்றவாளி ஆனால் உலகில் வாழும் முஸ்ஸிங்களின் 90 விகிதமானோர்களினால் புகழ்பாடப்படும் உத்தமன்.

பாதணிகளால் புஷ்க்கு எறியும் போது நீ பதவி விலகும் போது கொடுக்கும் முத்தம் என தெரிவித்தவாறு வீசியிருந்தான். இதற்கு சைதிக்கு கிடைத்த பரிசு லிமோஸின் ரக மெர்சிடிக் கார். இதனை பாக்ஸ்தான் வம்சாவளி வழங்க முன்வந்துள்ளார்.

முன்டஸிர் அல் சைதிக்கு இருவருட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியேறினாலும் உலக வல்லாதிக்கம் கொண்ட நாட்டுத் தலைவர்க்கு கிடைக்கப் பெற்ற அவமானம் என்றுமே மாறாது. ஏனைய நாடுகளின் மீது ஏகாதிக்கம் செலுத்த நினைப்போருக்கு தக்க வரலாற்று பாடம்.


நன்றி

http://www.pathivu.com/news/960/34/.aspx

Posted in |

2 comments:

  1. அது சரி(18185106603874041862) Says:

    //
    ஆனால் உலகில் வாழும் முஸ்ஸிங்களின் 90 விகிதமானோர்களினால் புகழ்பாடப்படும் உத்தமன்.
    //

    இந்த So Called உத்தமன் சதாம் உசேனின் ஆட்சி காலத்தில் எங்கே இருந்தார்? அவரது காலத்தில் அவருக்கு ஷூ போடும் வசதி இல்லையா இல்லை தலையை வெட்டி விடுவார்கள் என்ற பயமா??

    பத்திரிக்கையாளன் என்ற பெயரில் உள்ளே நுழைவது, அப்புறம் செருப்பை எறிவது.....ஏன் இந்த துணிச்சல் காரர் சதாம் உசேன் மீதும் அவர் மகன்கள் மீதும் செருப்பை எறிந்திருக்க வேண்டியது தானே?? ஓ, ஒரு வேளை இவருக்கு ச்தாம் உசேன் தான் தேவ தூதனோ??

    //
    இதற்கு சைதிக்கு கிடைத்த பரிசு லிமோஸின் ரக மெர்சிடிக் கார். இதனை பாக்ஸ்தான் வம்சாவளி வழங்க முன்வந்துள்ளார்
    //

    பாகிஸ்தான் வம்சாவளியா? மெர்சிடிஸ் கார் என்ன, அவர்கள் மும்பையில் ட்ரைன் ஸ்டேஷனில் காத்திருக்கும் அப்பாவி பயணிகளை கொன்று குவிக்க ட்ரைனிங்கும் வழங்குவார்கள்...நீங்கள் அதையும் வாழ்த்தி ஒரு பதிவு போட வேண்டியது தானே?

  2. Anonymous Says:

    "Adthu Sari" noticed valid points. I appreciate "Adthu Sari".

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails