மும்பையில் இடம்பெற்ற தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் கண்டிக்கவில்லை என தமிழ்நாட்டின் தமிழர் விரோத ஆங்கில ஏடான இந்து (The Hindu) நாழிதழ் எழுப்ப

மும்பையில் இடம்பெற்ற தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் கண்டிக்கவில்லை என தமிழ்நாட்டின் தமிழர் விரோத ஆங்கில ஏடான இந்து (The Hindu) நாழிதழ் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் புதிய தமிழர் கண்ணோட்டம் இதழில் பதிலிறுக்கப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர்நாள் உரையில் மும்பை தாக்குதல் கண்டிக்கப்படவில்லை எனவும், அல்லது பின்னரேனும் கண்டித்திருக்கலாம் என்றும் இந்து நாழிதழ் கடந்த முதலாம் நாள் ஆசிரியர் தலையங்கள் தீட்டி விசமப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தது.

அனைத்துலக விடயங்களில் விடுதலைப் புலிகள் ஆதரவை, அல்லது கண்டனத்தை தெரிவிப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் தமிழர் கண்ணோட்டம், அவ்வாறு கண்டனம் தெரிவித்திருந்தால்கூட, இந்தியாவை ஏமாற்ற விடுதலைப் புலிகள் செய்யும் சூழ்ச்சி இதுவென இந்து நாழிதழ் மாற்றுப் பரப்புரை மேற்கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடுகின்றது.

மேலும் படிக்க

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1407:2008-12-07-05-38-13&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56


http://www.yarl.com/forum3/index.php?showtopic=48013

Posted in |

3 comments:

 1. Anonymous Says:

  தமிழீழத்தை ஒரு நாடாகவும் விடுதலை புலிகளை ஒரு அரசாகவும் இந்து நாளேடு தன்னையறியாமலே ஒப்புக்கொண்டு விட்டது

  என்று தான் இதை சொல்லவேண்டும்!

  One thing is very clear! People like Hindu Ram are in a very desperate situation to satisfy their Sri Lankan masters

 2. கரிகாலன் Says:

  தன்னையும் அறியாமல் தமிழீழத்தின் உண்மை நிலையை அறிந்து, விடுதலைப்புலிகள் பேரியக்கத்தின் நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் தமிழீழத்தை தனிநாடாகவும் விடுதலைப்புலிகள் இயகத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை தமிழீழத் தலைவராகவும் ஏற்றுக்கொண்ட “இந்து நாளேட்டை பாராட்டுவோம்.”

 3. Anonymous Says:

  வருடக் கணக்கில் எம்மீது நடக்கும் ,
  விமானக்குண்டு வீச்சுக்களை ,
  செல்வீச்சுக்களை ,
  பொருளாதார தடைகளை என்றாவது இந்து பத்திரிகை கண்டித்துள்ளதா

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails