மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு

அண்மையில் பார்த்த ஒரு ஓளிப்பதிவு http://sinnakuddy1.blogspot.com/2008/12/vijy-tv.html, ரொம்ப கஷ்டமாக இருந்தது.

அவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை மறுக்கப்படுவது என்பது ஏற்று கொள்ள முடியாது. அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு குறைந்தது 0.001 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதாவது 1000ல் ஒருவருக்கு வேலை வாய்ப்பளிக்க பட வேண்டும். அதவாது 1000 பேர் அரசாங்க வேலையில் அமர்த்தினால் ஈழத்தமிழர் அகதியாக வந்தவருக்கு ஒரு பதவி. மிகக்குறைந்த கோரிக்கை.

அவர்கள் வாழ்வில் அடிபட்டவர்கள், சொந்த, பந்தங்களை தொலைத்து நம்மிடம், புகலிடம் தேடி வந்தவர்கள். நம்மை விட்டால் யார் காப்பது இவர்களை. ஒரு சிறிய மனிதாபிமான உதவி நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு. காலங்களில் எப்போதும் மாற்றங்கள் மாறாதது. இன்று வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருக்கும் அவர்கள் இன்னும் 1,2,5,10,25 ... வருடங்களில் சுதந்திரம் கிடைத்து முன்னுக்கு வராமலா செல்வார்கள். அப்போது இந்த ஒதுக்கீடை நிறுத்தி கொள்ளுங்கள். எத்தனையோ சாதி, எத்தனையோ ஒதுக்கீடுகள். ஏன் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும் இருந்து விட்டு போகட்டுமே.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails