இலங்கைப் போரின் நிலை என்ன? வன்னிக் களம் தொடர்பாக பா.நடேசன் விளக்கம்

கொழும்பு, டிச. 7- வன்னிப்பெரு நிலப்பரப்பினை சுற்றி சிறீ லங்கா படையினர் மேற் கொண்டு வரும் இராணுவ நட வடிக்கைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பா ளர் பா.நடேசன் விளக்க மளித்துள்ளார்.
மன்னாரிலிருந்து - கட்டம் கட்டமாக - சிறிலங்கா இராணு வம் எங்களுடைய பிரதேசங் களை ஆக்கிரமித்து வரும் பொழுது சிங்கள இராணுவத் தளபதிகளும், அரசியல் தலை வர்களும் குறிப்பிட்ட காலத் திற்குள் பிரதேசங்களைக் கைப் பற்றுவோம் என்று சொல்கி றார்களே தவிர, அப்படியான கால எல்லைக்குள் அவர்கள் சொல்லுகின்றபடி பிரதேசங் களை அவர்களால் கைப்பற்ற முடிவதில்லை என்பது தான் உண்மை. உலக நாடுகள் எல் லாம் சிறீலங்கா அரசிற்கு நிறைய இராணுவ உதவி செய் கிறார்கள். நவீன போர் ஆயு தங்களை அள்ளிக் கொடுக்கின் றார்கள். எமது இயக்கம் பற்றிய உளவுத் தகவல்களையும், இராணுவப் பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கு கிறார்கள். இவ்வாறான உதவி களையும், இரண்டு இலட்சத் திற்கும் அதிகமான ஆளணியை யும் வைத்துக்கொண்டு கூட, சிங்களப் படையால் குறிப் பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளைக் கைப்பற்ற முடி யாமல் இருக்கின்றது. கிளி நொச்சியை பிடிப்பதற்காக எத் தனையோ கால வரையறைகள் வகுத்தும் சிறீலங்கா இராணு வத் தளபதியாலும் சிறீலங்கா அரசத் தலைவர்களாலும் அது இன்னமும் முடியாமல் இருக் கின்றது.

இப்போது - சிங்களப் படை களுக்கு பெரிய இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த இழப்புக்களை மூடி மறைப்ப தற்காக ஊடகங்கள் மீதான பெரிய ஒரு தடையை சிறீ லங்கா அரசு ஏற்படுத்தியிருக் கின்றது. இப்போது - சிறீலங்கா வில், முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரசிங்கவினுடைய னுநகநஉந றுயவஉ என்ற இணையத் தளத் தில் - சிங்களப் படைகளின் மனநிலை, அவர்களுக்கு ஏற் பட்டிருக்கின்ற இழப்புக்கள், எவ்வளவு படையினர் ஒவ் வொரு நாளும் களத்திலிருந்து அப் புறப்படுத்தப்படுகின்றனர் போன்ற தகவல்கள் வெட்ட வெளிச்சமாகக் குறிப்பிடப்படு கின்றன.

இன்றைய உண்மையான கள யதார்த்தம் என்னவெனில் - சிறீலங்கா படையினர் என்று மில்லாத அளவுக்குப் பலவீன மாக உள்ளனர். எங்களது முப்பது வருட போராட்ட வர லாற்றில் சிங்கள இராணுவம் தற்போதுள்ள அளவிற்கு பல வீனமான நிலைக்கு ஒரு போதும் செல்லவில்லை. இந்த நேரத்தில் தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, இந்தச் சூழலை எமக்குச் சாத கமானதாக மாற்ற வேண்டும். நாங்கள் ஒரு மிகச் சிறிய தேசிய இனம். எமது தேசிய இனத்தி னுடைய ஆளணி மிகக்குறைவு. எண்ணிக்கையில் எம்மை விட பல மடங்கு அதிகமான எண்ணிக்கை உடைய ஒரு இனத்தின் படைகளுக்கு எதி ராக நாம் போராடுகின்றோம். 1948 ஆம் ஆண்டிற்கு முற் பட்ட காலத்திலிருந்தே தமிழர் தாயகப் பிரதேசம் எவ்வாறு சிங்களப் பிரதேசமாக மாற்றப் படுகின்றதென்பது எமக்குத் தெரியும். அபிவிருத்தித் திட் டங்கள், குளம் நிர்மாணங்கள் என தமிழர் தாயகம் திட்ட மிடப்பட்ட சிங்கள குடியேற் றங்கள் மூலம் சிங்கள மயமாக மாற்றப்பட்டு, தமிழ் ஊர் களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவது தொடர்ச்சியாக இடம்பெறுவது எமக்குத் தெரியும். இந்த வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. கல்வி என்றாலும், வேலை வாய்ப்புக்கள் என்றாலும் குடி யேற்றம் என்றாலும் எல்லாமே சிங்கள மயமாக்கப்பட்டு வரு கின்றது. எங்களுடைய ஆயுதப் போராட்டம் தோற்றம் பெறு வதற்கு முன்னர் - கடந்த கால அரசியல் தலைவர்கள் நடத் திய அமைதிப் போராட்டங் கள் எவ்வாறான அரச பயங் கரவாதச் செயல்களால் ஒடுக் கப்பட்டன என்பதும் யாவரும் அறிந்ததே. நாம் ஏன் ஆயுதத் தினை ஏந்த நிர்ப்பந்திக்கப் பட்டோம் என்பது யாவருக் கும் தெரிந்ததே.

நாங்கள் ஆயுத் தின் மீது காதல் கொண்டவர் கள் அல்லர். சிங்கள அரச பயங் கரவாதமே எம்மை ஆயுதம் ஏந்திப் போராட வைத்தது. இதுவே யதார்த்தம். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடாமல் இருந்திருப்பின் எங்களுடைய தாயகம் முற்று முழுதாக சிங் கள மயப்படுத்தப்பட்டிருக்கும். கடந்த காலத்தில் எங்களு டைய அரசியல் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்க ளுக்கு என்ன நடந்தது என்பது யாவரும் அறிந்ததே. எமது விடுதலைப் போராட்டத்தை நாம் இடைநடுவில் கைவிட முடியாது.

thanks : http://files.periyar.org.in/viduthalai/20081207/news09.html

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails