இந்தியப் பிரதமரை சந்தித்தாலும் போரை நிறுத்த மாட்டோம்: சிறிலங்காவின் அமைச்சர்

என்ன ஒரு கொலைவெறி பேச்சு, ஒரு மோசமான கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஒரு அரசிடம் என்ன எதிர்பார்க்க முடியும். இந்தியா கொடுக்கற செல்லம்தான் இதற்கொல்லாம் காரணம். அடம் பிடித்து யாரை வேணாலும் கொல்லலாம் என்ற முடிவில் இருக்கும் இலங்கை அரசினை தமிழர்களது சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாக கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது இவ்வாறு பதிலளித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நிறுத்துமாறு இந்திய அரசாங்கம் ஒருபோதும் வேண்டுகோள் விடுக்காது எனவும் கூறினார்.

அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து இந்திய மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அனைத்துக்கட்சி ஆலோசனைகுழுவின் மூலமாக இன நெருக்கடிக்கான தீர்வுக்ள முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தற்போது பலவீனமடைந்து வருகின்றனர் இந்த நிலையில் போரை அரசாங்கம் நிறுத்தாது. ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பேச்சுக்கு வருவதுதான் புலிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு வழி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails