கருணாநிதி-மாறன் குடும்பத்தினர் சந்திப்பு ஏன்? ஜெயலலிதா கேள்வி

இப்படி ஒரு கேணத்தனமான கேள்வியை யாரும் கேட்க முடியாது. அவங்க சொந்தகாரங்க அடிச்சுகுவாங்க, சேர்ந்துகுவாங்க, இது அவர்களின் சொந்த விசயம். இதில் ஜெ. மூக்கை நுழைப்பது என்பது மூக்குடை படுவதற்கே.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சந்திக்காமல் இருந்த வந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரும், மறைந்த முரசொலி மாறன் அவர்களின் குடும்பத்தினரும் சில தினங்களுக்கு முன் சந்தித்து பேசியதை அடுத்து அவர்களுக்கு இடையே இருந்த பிணக்கு நீங்கக் கூடும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு மதுரையில் தினகரன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

கடந்த பல மாதங்களாக பரஸ்பர குற்றச்சாட்டுகளை இருதரப்பினரும் கூறிவந்தனர். இந்நிலையில் திடீரென சில தினங்களுக்கு முன்னர் இந்த இருகுடும்பத்தாரின் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்று அஇஅதிமுக வின் பொதுச் செய்லர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஒருவர் மீது மற்றவர் சாட்டிய குற்றச்சாட்டுகள் என்ன ஆயிற்று என்றும் அவர் வினவியுள்ளார்.

மேலும் மாறன் குடும்பத்தாருடன் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு பிறகு தமிழக
அரசு ஆரம்பித்த கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன என்றும் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்

Posted in |

4 comments:

 1. Kamal Says:

  //இப்படி ஒரு கேணத்தனமான கேள்வியை யாரும் கேட்க முடியாது. அவங்க சொந்தகாரங்க அடிச்சுகுவாங்க, சேர்ந்துகுவாங்க, இது அவர்களின் சொந்த விசயம். இதில் ஜெ. மூக்கை நுழைப்பது என்பது மூக்குடை படுவதற்கே//
  தலைவா...இவங்க குடும்ப சண்டையால மக்களுக்கு எந்த தொல்லையும் இல்லாம இருந்திருந்தா யாரும் மூக்க நுழைக்க மாட்டாங்க...
  இவங்க குடும்ப சண்டையால தான் மதுரைல மூணு அப்பாவி உயிர் போச்சு....
  தயாநிதி மந்திரியா இருந்தப்போ 10,000 கோடி ஊழல்னு அதே கட்சி மந்திரியான ராசா சொன்னாரு...ஆகா இது குடும்ப பிரச்சனை இல்லை...அதனால யார்வேணா கேள்வி கேக்கலாம்...அந்த கேள்விகளுக்கெல்லாம் முடிஞ்சா நீங்க பதில் சொல்லுங்க.....

 2. Anonymous Says:

  செல்வி அம்மையாருக்கு என்ன சிறப்பு செய்யலாம்,எதைச் செய்தால் பித்தம் தெளியும் என்பதைப் பற்றித்தான் பேசினார்களாம்.
  இப்படியெல்லாம் உளறிக் கொட்டினால் தான் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தொண்டரடிப் பொடி ஆழ்வார்கள் ந்ம்புவார்களாம்.

 3. தீரன் Says:

  அம்மயாருடனே எப்பொழுதும் தோழி சசிகலா உள்ளார்களே அது ஏன்?
  அம்மா எதை சாதித்தற்காக கொட நாடு எஸ்டேட் போய் ரெஸ்ட் எடுத்தார்கள்?
  அம்மா வளர்ப்பு மகனாக சுதாகரனை தேர்ந்தெடுத்தார்களே அது ஏன்?
  அந்த சுதாகரனை கஞ்சா கேசில் உள்ளே போட்டார்களே அது ஏன்?
  போடா சட்டத்தில் கைது பண்ணின தீவிரவாதி உடன் கூட்டு வைத்து உள்ளார்களே அது ஏன்?

 4. karhtik Says:

  yenda dei antha 3 peru sethu ponagale avanga nelama? oru courtle case potutu alayuthe avunga enna pathil. konjamavuthu yosida pannada

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails