ஐடி இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஐடி-யா, கொக்கா. நண்பர்களுக்கு வாழ்த்துகள். அரசியலற்ற உங்களின் செய்கை பார்த்தாவது திருந்தட்டும் இந்த ஈனத் தமிழின துரோகிகள் தினமலர் வகையறாக்கள்.

ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக 13.12.2008 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

சிங்கள் அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழக மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி உட்பட பல்வேறு கோரிக்கைகளை

மத்திய அரசுக்கு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர்

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான் உட்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள்இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்


* OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்.

* இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் தினமும் இறக்கிறார்கள் அவர்கள்.

* அடுத்த வேளை உணவு, KFC Chicken-ஆ அல்லது Pizza Hut-ஆ என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம். நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்.

* பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்.

* சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்.

* நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails