சர்வதேசத்தின் தவறான முடிவுகளே தமிழின அழிவிற்கு காரணம்-ஈழமுரசு
Posted On Friday, 19 December 2008 at at 13:11 by Mikeதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட தன் அடிப்படையிலேயே, சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசையும் - தமிழீழ விடுதலைப் புலி களையும் சமதரப்பாக கருதி பேச்சுக்களில் ஈடுபட வைத்தன. பேச்சுக்களின் போது இரு தரப்பை யும் சமமாக பாவித்த சர்வதேசம், தமிழ் மக்கள் மீது தாங்கள் விரும்பியதைத் திணித்து ஏமாற்ற முடியாது என்ற கட்டத்திலேயே அச்சுறுத்தல்களையும் விடுக்க முனைந்தன.
இந்நிலையில்தான், சிறீலங்கா பேச்சுக்களை முறித்துக்கொண்டு வெளியேறியபோதும், சிறீலங் காவை குற்றம்சாட்டாத அனைத்துலகம், மாறாக விடுதலைப் புலிகள் மீதே அழுத்தங்களை பிரயோகித்து, தடைகளையும் விதித்து ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்தது. அத்துடன், சர்வதேசத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை சிறீலங்கா ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறிந்து போருக்குள் நுழைந்தபோது, சர்வதேசம் அதனைக் கண்டிக்காது மௌனமாக வேடிக்கை பார்த்தது. சர்வதேசத்தின் இந்த செயற்பாடுகளே தமிழ் மக்களின் அழிவிற்கும், இந்த அவல நிலைமைக்கும் காரணம் என்பதுடன், அமைதி வழியில் இருந்து விலகி சிறீலங்கா இன வாத போரை முன்னெடுப்பதற்கும் சர்வதேசத்தின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவுகளே கார ணம் என்பதையும் தலைவர் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது என்றும், அதற் காக உலகத்தையே திரட்டிவந்து மோதுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ள தலைவர், இராணுவ வெற்றி பற்றிய சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும் என்றும் மாவீரர்கள் கண்ட கனவு நனவாகும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
உலகம் ஒன்றுபட்டு நின்று தமிழருக்கு எதிராக போரைத் தொடுத்துள்ளபோதும் தனித்து நின்று தமிழ் மக்களின் தார்மீக பலத்தில் நின்று போராடுகின்றோம் என்று கூறியுள்ள தலைவர், சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கவே ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுசெய்ய வில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்ததுள்ளது என்பதையும் தெளிவுப டுத்தியுள்ளார். அத்துடன், சிறீலங்கா கட்டவிழ்த்துவிட்டுள்ள போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் அல்ல என்றும் இது தமிழர்களுக்கு எதிரான போர். ஒரு தமிழின அழிப்புப் போர் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றா��
�். சர்வதேசத்தின் தவறான, ஒருதலைப்பட்சமான முடிவுகளே இன்று சிறீலங்கா நடத்திவரும் போருக்கும், தமிழின அழிவிற்கும் காரணம் என் பதை தலைவரால் வெளிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, தமிழ் மக்களுக்கு எதிரான தவறான முடிவுகளை எடுத்த சர்வதேசமே, இன்று அந்த மக்களின் அழிவை தடுத்து நிறுத்தி அந்த மக்க ளுக்கு நியாயம் கிடைப்பதற்கான வழிவகைக ளையும் செய்யவேண்டும் என்பதே தலைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதற்காக தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசை களையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்து கொண்டு, தம் மீதான தடையை நீக்கி, தமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இறுதியாக, தமிழர்களுக்கு நீதியான தீர்வொன்றை என்றைக்குமே சிறீலங்கா பேரினவாதம் வழங்கப்போவதில்லை என்பதைக் குறிப்பிட்டுள்ள தலைவர், வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உல கின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் தேச விடுதலைக்கு உறுதி யாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு கேட் டுக்கொண்டிருக்கின்றார்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=48586