படையினர் தப்பி ஓட்டம், 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோமீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

இதன் பின்னர் விடுதலைப் புலிகளால் இரண்டு கிலோமீற்றர் முன்னரண் மீட்கப்பட்டது.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த அதிரடித்தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/view.php?22IWnz200jj0U2eeGG7r3bb99EY4dd22h2cccppO3d44QQH3b02LLS3e

http://www.yarl.com/forum3/index.php?showtopic=48628

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    Gud news.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails