சீமான் கைது மனவருத்தத்தை அளிக்கிறது - மணிவண்ணன்
Posted On Sunday, 21 December 2008 at at 12:52 by Mikeசீமான், கொளத்தூர் மணி கோவை சிறைக்கு கொண்டுவரப்படும் தகவலை தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் கோவை சிறை வாசலுக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
டைரக்டர் சீமானின் கார்மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இப்போது அவரும் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது மனவருத்தத்தை அளிக்கிறது. அவரது கார்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே சீமான் கைது செய்யப்பட்டார். மக்கள் மத்தியில் இது எதிரொலித்தது. இப்போதும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே இந்த கைது நடவடிக்கை ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல என்றார்.
சரித்திரமும்,நிகழ்வுகளும் தலைவர்களை
உருவாக்குகின்றன.
இன்றைய தமிழகத்துக்குச் சரியான,
அனைவரையும் ஒன்றினைத்து
தமிழனைத் தலை நிமிரச் செய்ய
ஒரு தலைமை யில்லை.
அந்த இடத்திற்கு அவர் விரும்பாமலேயே சீமான் தள்ளப் பட்டு வருகிறார்.
தமிழினத்திற்கு உண்மையாக உழைக்கும் தலைவர்கள் மீது மரியாதையும்,தொண்டர்கள் மீது அன்பும் வைத்துள்ள இவர் தலைமைப் பதவியை நாட வில்லை.ஆனால் தலைமைப் பதவி இவர் மீது திணிக்கப்பட்டு வருகிறது.
அதற்குள்ளத் துணிவு,நேர்மை,உழைப்பு,சிந்தனை,
அறிவு,ஆண்மை பெற்றுள்ளார்.
தமிழகத்தின் விடி வெள்ளி தோன்றி
விட்டது.விடியட்டும் தமிழின விடுதலை.
விண் தொலைகாட்சியில் சீமான் கைது பற்றி செய்தி வாசிக்கும்போது "சைமன் என்ற சீமான்" என்றே சீமான் என்றே வாசித்தார்கள், அதன் உள்நோக்கம் என்னவோ?
விண் தொலைகாட்சியா, அது பற்றி தெரியாது. ஆனால் தமிழன் உணர்வை மதத்தாலும், ஜாதியாலும் துண்டாட நினைக்கும் பொறுக்கிகள், துரோகிகள் இருக்கத்தான் செய்வார்கள் இந்த உலகில், இவர்கள் பேசறதை எல்லாம் கண்டுக்காதீர்கள்.