த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் - எல்.கே. அத்வானி சந்திப்பு
Posted On Thursday, 18 December 2008 at at 11:54 by Mikeஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும், இந்திய எதிர்க்கட்சி தலைவருமான எல்.கே. அத்வானியை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிசத் ஆகிய இந்து அமைப்புகள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/view.php?226Wn5203tj0C2e2UG7f3b3X9Ei4d3C2h3cc0DpO4d4eAQHcb0bBLSde