கலைஞர் ஐயா, நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்க

கலைஞர் ஐயா, இதற்கு என்ன பதில் சொல்றிங்க. விடுதலை புலிகளை பற்றி இப்படி அண்ட புளுகு, ஆகாச புளுகு பண்ணுவது என்பது இந்திய இறையாண்மை க்கு ரொம்ப பிடிக்குமா ?. இது மாதிரி பொய் சொல்ற பத்திரிக்கைகளை நீங்க கேட்க மாட்டிங்க, இளிச்ச வாயன் தமிழனை மட்டும் போட்டு பந்தாடுவிங்க.

எந்த சிங்கள அரசோ, அதன் இணையதளங்களிலோ, சிங்கள பத்திரிக்கைகளிலோ இந்த செய்தி வரவில்லை, ஆனால் நம்ம த.து தினமலரில் மட்டும் இந்த செய்தி வந்துள்ளது. இது வரை தினமலர் கொன்ற புலிகளின் எண்ணிக்கை மட்டும், ஏறக்குறைய 2 லட்சம் இருக்கும். பிரபாகரனை 3 க்கு மேற்பட்ட முறை jesus ஆக்கியது, ஆமாம் கலைஞரே எத்தனை முறை செய்தி அவர் இறந்ததாக, இதற்கு தினமலர் ஒரு முறையாவது வருத்தமாவது, மன்னிப்பாவது கேட்டதுண்டா. இதை நீங்களாவது கேட்டதுண்டா.

இந்த மாதிரி பொய்களை எடுத்து சொன்னால் அது வி.பு ஆதரவு சொல்வீங்களா ஐயா, அல்லது தமிழன் எல்லாம் இளிச்ச வாயான் மாதிரி இவன் சொல்றத கேட்டுட்டு இருக்கனுமா. தமிழின முதல்வனே ஏன் இந்த பாகுபாடு, இவனை எதிர்த்து கேட்க தைரியம் இல்லாத நீ, உண்மை தமிழனுக்கு மட்டும் வாய்ப்பூட்டு, கைபூட்டு போட நினைப்பதேன்.

ஆதாரப்பூர்வமாக தினமலரின் இந்த கீழ்த்தரமான செயலை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். நீங்களே ஒரு முடிவு சொல்லுங்கள். இதுக்கு நாங்கள் பதில் சொல்லலாமா குடாதா. இது உங்க காங்கிரஸ் இறையாண்மை ஏதும் பாதிப்பு ஏற்படுத்துமா.

நீர் இப்படியே, காங்கிரஸ் க்கு ஜால்ரா அடித்து கொண்டிருந்தால், தி.மு.க வின் தனிதன்மை பாதிக்கும். அப்புறம் காங்கிரஸ் மாதிரி தான் தி.மு.க இருக்கும். மக்கள் தேர்தலிக் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

காங்கிரஸை நீங்கள் மிரட்டியது போயி, அது இப்போது உங்களை மிரட்டுகிறது. ஒரு மிரட்டலில் தமிழனுக்கு உரிமை கொடு மற்றொன்றில் தமிழனின் உரிமையை பறி. உங்கள் கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails