நளினி விடுதலையை எதிர்த்து சுப்பிரமணியசாமி மனு விசாரணை தள்ளிவைப்பு
Posted On Wednesday, 24 December 2008 at at 09:53 by Mikeஏன் இவர் நளினி வெளிவருவதில் சாமி இவ்வளவு அதிர்ச்சியடைகிறார். ராஜிவ் கொலையின் உண்மைகள் இப்பொது ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன். சீக்கிரமே மாட்டிக்க போறார் இந்த 2 சாமி-யும். இவர்கள இருவரையும் உண்மை அறியும் சோதனையில் ஈடுபடுத்த வேண்டும். ராஜிவ் கொலை - உண்மை குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதற்காக கவர்னர் உத்தரவு பிறப்பித்தார். 17 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆலோசனை கமிட்டியை முறையாக கூட்டி பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த சூழ்நிலையில் நளினியை விடுதலை செய்ய சட்டத்தில் இடமில்லை என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
ஒரு தடவை மன்னிப்பு வழங்கிய பிறகு, இரண்டாவது முறையாக மன்னிப்பு வழங்க முடியாது என்றும், வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்தியா, நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். அடுத்த மாதம் (ஜனவரி 27-ந் தேதிக்கு) விசாரணையை தள்ளி வைத்தனர். இதுபற்றி பதில் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சந்திர சாமிக்கிக் கம்பியெண்ணவும்,
இருவரும் சேர்த்து அடித்தக் கொள்ளையைச் சரியாகப்
பங்கு போட்டுக் கொள்ளவும்
சு.சுவாமி விரைவில் ஜெயிலுக்குச்
செல்ல வேண்டும்.
உள்ளதைச் சொல்லி ஒழுங்காக
நடந்து கொண்டால் தண்டனை
குறைக்கப் படலாம்.