கொண்டலீசா றைஸ் கவலை -இலங்கையில் மோசமடைந்து செல்லும் மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் வேகமாக அதிகரித்துச் செல்வதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் கவலை தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பண்பாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போரில் ஈடுபடும் தரப்பினரான சிறிலங்கா அரசாங்கம், துணை இராணுவக்குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகள் போன்றோர் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றன.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி மைக்கேல் டீ ரார் சிறிலங்கா அரசுடன் இணைந்து மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காக பணியாற்றியிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முதன்மையான பங்கு வகித்திருந்தது. துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்களை களைவதிலும் அமெரிக்கா அக்கறை காட்டியிருந்தது என்றார் அவர்.

http://www.puthinam.com/full.php?221VoA200ccYy2eeAA4I3bb66DD4dd11e2cccmmI3d44OOA3a03CMR3e

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    அமெரிக்க ஆதிக்க சக்தியின் அறிவிப்பாவது தூங்கிக் கொண்டிருக்கும் இந்திய அரசின் அரசியல் நாடகதாரிகளின் வேஷ்ங்களைக் கலைக்குமா?
    மெளண முனி மன்மோகன் சிங்,சோனியா அம்மையாருடன் பேசித் த்மிழினத்தின் அழிவை நிறுத்துவாரா?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails