அவுஸ்திரேலியா- மனித உரிமை மீறல் கவலை, வன்னி மக்களுக்கு உதவி

உலக நாடுகள் கண்விழிக்க ஆரம்பித்து விட்டன, இனி மகிந்தவும், சகோவும் சிறைக்குதான் செல்ல போகிறார்கள். தமிழ் மக்களே தொடர்ந்து குரல் கொடுங்கள் ஈழத்தமிழருக்காக.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் கவலை அளிப்பதாகவும், வன்னியில் அவலப்படும் மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்க இருப்பதாகவும் அவுஸ்திரேலியாஅறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஸரீபன் ஸ்மித் இந்தத் தகவல்களைக் கூறியிருக்கின்றார்.

4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி, சீனி உட்பட பல அத்தியாவசிய நிவாரணப் பொருள்கள் வன்னியில் அவலப்படும் மக்களிற்கு தமது அரசினால் வழங்கப்பட இருப்பதாக அவர் கூறினார்.


மக்கள், மற்றும் தொண்டர் அமைப்புக்களின் சுதந்திர நடமாட்டத்தை வலியுறுத்திய அவர், இந்த நிவாரணப் பொருள்கள் எவ்வாறு வன்னிக்குள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன என்ற விபரததைக் கூறாது தவிர்த்திருக்கின்றார்.


தமிழ்நாடு மக்கள் அனுப்பி வைத்திருந்த நிவாரணப் பொருள்களை வன்னிக்கு அனுப்ப விரும்பாத சிறீலங்கா அரசு, அதனை பல நாட்கள் தாமதத்தின் பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக அனுப்பி வைத்திருந்தது.


இந்த நிலையில், அவுஸ்திரேலிய அரசின் நிவாரணப் பொருள்கள் எவ்வாறு வன்னி செல்லப் போகின்றன? அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் போன்ற கேள்விகள் பலமாக எழுந்துள்ளன.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails