90 சிங்கள படையினர் பலி 120 பேர் காயம்; 12 சடலங்கள் மீட்பு – விடுதலைப் புலிகள் அறிவிப்பு:

கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கையை தாம் முறியடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதில் 90 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 120-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 சடலங்கள் தம்மால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்

புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று (டிச10) காலை 9:00 மணிக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறிப் பீரங்கிககள் முழங்க முன்நகர்வினை மேற்கொண்டதாகவும் இதன்போது படையினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதுடன்

பிகே எல்எம்ஜி - 02, ஆர்பிஜி - 02, ஏகேஎல்எம்ஜி - 04, ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 11, இரவு பார்வை காட்டி - 01, லோ - 01

உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்றைய மோதல்கள் குறித்து படைத்தரப்பின் உத்தியோக பூர்வதகவல்கள் வெளியாகவில்லை.

http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=3163&cat=

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    gud news...

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails