சில பின்னூட்டங்களும் அதை பரப்பும் சிங்கள கயவர்களும்

சில பின்னூட்டங்களில் தமிழர் என்ற போர்வையில், சிங்கள அரசால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்திகள், அதற்கு உடந்தையாக இருக்கும் சில தமிழ் இன துரோகிகள். கண்டிப்பாக அதை படிக்கும் போதே தெரியும் கண்டிப்பாக இவன் தமிழனாக(மனிதனாகவே) இருக்க முடியாது என்று.

ஆனந்த சங்கரி, டக்ள்ஷ் இவர்களின் கேணத்தனமான சிங்கள அரசின் துணையுடன் கூட்டம், கூட்டமாக கண்ணை மூடிட்டு அனுப்பும் பின்னூட்டம், அது மாதிரி வந்த ஒன்றையே தமிழர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் தினமலர் வெளியிட்டது.

இவர்களின் உச்சகட்டம், சிங்களன் என்றே தெரியாத அளவுக்கு எழுதுவது, என்னமோ எல்லா தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது போல் பொடி வைத்து எழுதுவது.

சிங்கள அரசு அனைத்து வித செய்கைகளையும் கையாள்கிறது, தமிழர்களுக்கு எதிரான சதிகளில். அதில் ஒன்றுதான் இந்த பின்னூட்ட பரப்புரை. இதில் மிகச்சில தமிழ் வலைப்பதிவர்களின் துணை வேறு.

நண்பர்களே, இது மாதிரி பின்னூட்டங்கள் வந்தால் அதை உங்கள் பதிவுகளில் சேர்க்காதிர்கள். இவர்களின் நோக்கம் சிங்கள அரசுக்கு சார்பாக தமிழர் என்ற போர்வையில் கருத்துக்களை கூறுவதே.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails