ரெண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் பேசுகின்றனர்

ரெண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் பேசுகின்றனர், ரெண்டு ஹிந்தி காரர்கள் சந்தித்தால் ஹிந்தியில் பேசிகிறார்கள், கன்னடர், தெலுங்கர் சந்தித்தால் அவர்கள் தாய் மொழியில் பேசுகின்றனர். ஆனால் ரெண்டு தமிழன் சந்தித்தால் அவர்கள் ஆங்கிலத்திலே பேசுகின்றனர். ஏன் இப்படி. இவனுங்க விடற பீலா தாங்க முடியாது.

சில சமயம் நண்பர்கள் வீட்டுக்கு செல்லும் போது இவர்கள் ஆங்கில தொல்லை தாங்க முடியாது. இதுல பெரிய கொடுமை என்னவென்றால் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்று சொல்லி அவர்கள் பெருமை கொள்ளும் விதமே அலாதிதான்.

ஆங்கிலம் மட்டுமே போதும் என்று நினைப்பவர்களுக்கு


பாட்டி, தாத்தா, சொந்தங்கள் இவர்களுடன் ஒரு வார்த்தை தமிழில் பேச முடியாமல் போகும், நட்பு அப்பவே விலகி போக ஆரம்பிக்கிறது.

இரு மொழிகள் தெரிவது நல்லது, அதுவும் தாய்மொழியே ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதது. Being bilingual 'protects brain'
http://news.bbc.co.uk/1/hi/health/3794479.stm

வெளிநாடுகளில் இருப்பவர்கள் உங்களின் இலக்கணப்பிழை உங்கள் குழந்தைகளின் ஆங்கில புலமையும் பாதிக்கும். குழந்தைகளாக கற்று கொண்டால் அதற்கு ஒழுங்கான ஆங்கிலம் வரும். நீங்கள் அவர்களுக்கு உங்கள் தாய்மொழியை கற்று கொடுங்கள். சிறிது காலம் பிறகு நீங்கள் கற்கலாம் ஆங்கிலம் அவர்களிடமிருந்து.

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை மறக்காதிர்கள்.

தாய் மொழி பேசுவதில் பெருமை கொள்ளுங்கள். வெளி நாட்டிலிருந்தும் இன்னும் தமிழை மறக்காமல் குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள், இதுதான் நிஜமான பெருமை. தமிழ் தெரியாது என்று சொல்றது பெருமையே கிடையாது.

ஈழத்தமிழர்களை இந்த விசயத்தில பாராட்டலாம். ஒரு ஈழச்சிறுவன் தொலைக்காட்சியில் சொன்னது நினைவிற்கு வருகிறது. எங்கள் ஊரில் தமிழில் பேசாவிட்டால் பைத்தியம் என்று சொல்வார்கள், இங்கு சென்னையில் தமிழில் பேசினால் பைத்தியம் என்று சொல்கிறார்கள் என்று.


உங்களிடம் வேறு விதமான கருத்துகள் இருந்தால் தெரிவியுங்கள்.

Posted in |

12 comments:

  1. Anonymous Says:

    Kaalam pooraavum ippadiye pulambikkondeyirukka thaanda neenga layakku. Pongadaa poi edhaavadhu uruppadiyaa velai vetti paarungade.

  2. Anonymous Says:

    அண்மையில் என் விட்டிற்கு வந்த நண்பர், என் 5 வயது மகளிடம் ஆங்கிலம் பேச, அவள் சொன்னாள் 'you are not talking proper english' வந்தவர்க்கு ஏன்டா வாயை விட்டோம் ஆகி விட்டது, அப்புறம் ஒழுங்காக தமிழில் பேச ஆரம்பித்தார்.

  3. Anonymous Says:

    nammai minjupavarkal kannadargal...
    thelungarkal kooda sollalaaam hindiyil pesuvadhi miga uyarvaaga ninaikkiraargal....

  4. கிரி Says:

    தமிழில் பேசுவதை கேவலமாக நினைப்பவர்கள் பலர் உள்ளனர்.

  5. T.V.ராதாகிருஷ்ணன் Says:

    http://tvrk.blogspot.com/2008/08/blog-post_11.html

  6. Mike Says:

    கிரி, T.V.Radhakrishnan, சுரேஷ் கிருஷ்ணன் மற்றும் அனானிகள் அனைவரது வருகைக்கும் நன்றி.

    மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகுதூரமில்லை. நாம் அவர்களுக்கு
    புரியும் விதத்தில் எடுத்துரைப்போம்.

  7. Anonymous Says:

    I am sorry for expressing my view in English.It is true lot of Tamil people feel ashamed of speaking their own language.when compared to other ethnic racial groups Tamils appear to have this inferiority complex,not talking in Tamil with an other Tamil is part of that inferiority complex.Learning different languages widens our minds and improves our knowledge base,but that doesn't mean we should stop talking our mother tongue.learning mother tongue improves innovation,creativity and thought process,learning English language is essential at this juncture ,but please don't ignore or marginalise our own language.
    I also thinks that lot of Tamils equalise knowledge of English with high intelligence.they think if you don't know English and speak in Tamil you are less clever.Of Course there is no correlation between English knowledge and intelligence.Knowledge comes with opportunity to learn.even if you are not educated,you can be still intelligent because it is inherent.
    just because I can speak and has English knowledge doesn't mean that I am intelligent than a person who can only speak Tamil,It's just that person hasn't had the same opportunity and the background as me.In Fact that person might be much more intelligent than me.

  8. Mike Says:

    உங்கள் கருத்துக்கு நன்றி வானதி அவர்களே, 'English is a language not a knowledge' என புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்களே.

    ஒருமுறை உறவினர் ஒருவரிடம் நலம் விசாரித்து கொண்டிருந்த போது, அவருடைய 8 வயது பேரனை பத்தி விசாரிப்பு வரும் போது அவரின் ஆதங்கம் புரிந்தது, என்னப்பா அவனுக்கு நான் பேசறதும் புரியலை, எனக்கு அவன் பேசறது புரியலை என்றார். 'i love you thatta' சொல்றான் அது மட்டும் புரியறது என்றார். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. அதன் தாக்கமே இந்த பதிவு.

  9. சிவக்குமரன் Says:

    i'll not accept you fully. I'm a marketing person. so, i'm used to travel in mumbai, hyderabad, bangalore and some north indian cities. I've seen some marathians, telugus, gujjus(gujarathis), they are all the same. Like what you feel about tamilians. any two mumbaikar meet, age between 25 and 30, they are used to communicate with english only. even they are born marathians. It's not like tamilians only have this habit.

  10. சென்ஷி Says:

    அட சில பேரு என்கிட்ட பேசவே மாட்டேங்குறாங்க.. அதுக்கு என்ன செய்யறதுன்னு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க :))

  11. Mike Says:

    நன்றி சென்ஷி மற்றும் புதுவை சிவா அவர்களே.

    /*அட சில பேரு என்கிட்ட பேசவே மாட்டேங்குறாங்க.. அதுக்கு என்ன செய்யறதுன்னு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க :))*/

    வலிய போய் பேசிப்பாருங்கள், 3 அல்லது 4 முறை வாய்ப்பு கொடுங்கள். ஒத்து வராதா விலகி கொள்ளுங்கள், அனைவரையும் நண்பராக்கி கொள்வது கடினம்.

  12. கபீஷ் Says:

    //ஈழத்தமிழர்களை இந்த விசயத்தில பாராட்டலாம்//

    ரொம்ப சரியா சொன்னீங்க. அவர்களின் மொழி மீதான மரியாதை(பாசம்/பற்று) மிகவும் போற்றத்தக்கது.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails