தமிழக நிவாரணப் பொருட்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சூறை

வன்னியில் இடம்பெயர்ந்து அவலத்திற்குள்ளாகியிருக்கும் தமிழ் மக்களுக்காக அனுப்பப்பட்ட தமிழக நிவாரணப் பொருட்களை வழியிலேயே மறித்து பொதிகளை உடைத்து சேதப்படுத்தியதாக சிறிலங்கா இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வன்னி மக்களுக்கு தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவு மூட்டைகளில் பல உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சில பொதிகளில் இருந்த பொருட்களில் பாதியை எடுத்து விட்டு மூட்டைகளை கட்டி இராணுவத்தினர் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் உண்மையிலேயே அனுப்பப்பட்ட முழுஅளவில் பொருட்கள் தங்களது பகுதிகளுக்கு வந்து சேரவில்லை என்று பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்

http://www.tamilwin.com/view.php?20IWnz20evj0q2ebiG7h3bdF9EC4dc82h3cc41pO3d43oQH3b02PLS3e

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails