இன்னொரு சிறுவர் படைச் சிப்பாய் சடலமாக மீட்பு
Posted On Monday, 22 December 2008 at at 10:17 by Mikeசிறுவர்களை வைத்து சண்டை போடும் ராசபக்சே க்கு எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். போருக்கு ஆள் கிடைக்காவிடில் தொல்வி என்று ஒத்து கொண்டு பேச்சு வார்த்தைக்கு செல்லுமய்யா. உம் சுய அரசியல் லாபத்துக்காக வெற்றி பெறுவது போல் ஊரை ஏமாற்றி அப்படி என்னய்யா சாதித்திர். பாவம் அப்பாவி சிறுவர்களை அவர்களை பலிகடா ஆக்கும் உம்மை உலக கூண்டில் ஏற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை. எங்கள் தமிழ் இன அழிவுக்கு முழுபொறுப்பும் உம்முடையதே.
சிறிலங்கா அரசாங்கம் தற்போது களமுனையில் சிறுவர்களை இராணுவத்தினருடன் தாக்குதலில் ஈடுபடுத்துகின்றனர். கடந்த வாரம் சிறுவர் சிப்பாய் ஒருவர் களத்தில் கொல்லப்பட்டிருந்தார். இவரது உடலத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றி சிறிலங்கா இராணுவத்திடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஒப்படைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முருகண்டியில் இடம்பெற்ற மோதலின் போது மேலும் ஒரு சிறுவர் படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரின் சடலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் 15 உடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இளவயதினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி
http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
http://www.yarl.com/forum3/index.php?showtopic=48729