come on TIDEL PARK and IT guys- good job

We have a application with bug(mahinda), remove the bug before it goes live. It will save lot of lives, otherwise it will kill the humans and spread all over the world. we need engr, snr.engr, analyst, architect, tester, leader,manager and director and all your support to remove the bug. Already much more pending, please work hard to remove asap. I know you are brilliant guys to sort out any problem. Please sort out this one too this is my humble request to every IT-ians.

இந்திய அரசு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்தக் கோரியும், சிறிலங்கா அரசு போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களும் மாணவர்களும் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தியுள்ளனர்.
இக்கவனயீர்ப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை சென்னையில் உள்ள TIDEL PARK இல் மாலை 4:00 மணி தொடங்கம் 5:00 மணிவரை நடைபெற்றது.

இதில் நடிகர்களான சூர்யா, சூர்யாவின் தம்பி கார்த்திக் உள்ளிட்ட பெருமளவிலான பொறியிலாளர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் “போரை நிறுத்து” என பொறிக்கப்பட்ட ரீ சேர்ட்டுக்களை அணிந்து வீதியில் கைகோர்த்த வண்ணம் நின்றனர்.

இக்கவனயீர்ப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றதாக நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் அமைந்துள்ள தொழில்நுட்பப்பூங்காவில், பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட மென்பொருட் பணியாளர்கள்,மாணவர்கள், ஈழத் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போரினைக் கண்டிக்கும் வகையிலும், அதன் வலியைப் பிறர்க்குணர்த்தும் வகையிலும், வாசகச்சட்டை அணிந்து, இன்று மாலை வீதியோரத்தில் மனிதச்சங்கிலியாகக் கைகோர்த்து நின்றார்கள். இந்தப் போராட்டத்திற்கென சிறப்பாக வடிவமைத்த வெள்ளை நிற மேற்சட்டை(T-Shirt)யின் முன்புறத்தே " போரை நிறுத்து" எனும் வாசகமும், பின்புறத்தே,"துப்பாக்கிகளுக்கு இதயம் இல்லை. உங்களுக்கு..?" எனும் வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. தினசரி, நிறுவனச் சீருடையில் செல்லவேண்டிய இவர்கள் வெள்ளிக்கிழமைகளில். தமதுவிருப் ஆடைகளைத் தெரிவு செய்ய முடியும். அன்றைய தினம் இந்த மேற்சட்டையைப் பாவிக்கப்போவதாகவும், இதனை மேலும் பல அமைப்புக்களுக்கு வழங்கவிருப்பதாகவும், இதன் மூலம், இலங்கைப்பிரச்சனை குறித்த ஒரு விழிப்புணர்ரவை, தமிழக இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியுமென நம்புவதாகவும், இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார். இன்று மாலை இப்போராட்டத்தின் ஆரம்பமும் அறிமுகமும் , சென்னைத் தொழில்நுட்பப் புங்கா முன்றலில் நடைபெற்றது. இவ் ஆரம்ப நிகழ்வில், நடிகர்கள் சூர்யா, கார்த்திக் ஆகியோர் அக்கறையோடு கலந்துகொண்டார்கள்.


http://www.puthinam.com/full.php?225Vo6203mcYA2e2OA4c3b3q6Dr4d3B1e3cc0UmI4d4eyOAca0bCMHde

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails