தமிழ்மணமும் இலங்கை அரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறதா

நமது சக தமிழ் வலைப்பதிவர் லோசன் கைது இலங்கையில், வேறு என்ன காரணமாக இருக்கமுடியும். இவர் தமிழர், தமிழில் பேசுகிறார், எழுதுகிறார், சிந்திக்கிறார்.

வெற்றி எப் எம் நிகழ்சி முகாமையாளரும் அறிவிப்பாளருமான லோஷனின் கைது இலங்கையில் சர்வசாதாரணமாகிப்போய்விட்ட ஊடக அடக்குமுறை மற்றும் அது சார்ந்த கைதுகளின் வரிசையில் இடம்பிடித்துவிட்ட ஒரு சம்பவமாகிப் போய்விட்டதில் வருத்தம் அதிகம் தான். எப் எம் ல் பெரிதும் அரசியல் பேசிவதில்லை. இவருடைய கைதுக்கு காரணம் தமிழ் வலைப்பதிவே.

எனது கண்டனங்களை இலங்கை அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன். இவர் விரைவிலே விடுதலையாக வேண்டும்.

Posted in |

5 comments:

 1. Anonymous Says:

  இலங்கை புலனாய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தளத்தில் இருந்து இங்கே பதிவு எடுத்துவரப்பட்டது, அதே போல் இங்கிருந்தும் பதிவு அந்த தளத்தில் இடப்பட்டது. அப்போதே இலங்கையில் இருந்து எழுதுபவர்கள் விழித்திருக்க வேண்டும். இலங்கை அரச கட்டுப்பாட்டில் இருந்து பதிவு எழுதுபவர்கள் கவனத்துடன் இருப்பது அவர்களுக்கு பாதுகாப்பானது.

 2. Anonymous Says:

  அவர் எழுதும் போதே நான் நினைப்பதுண்டு. வெள்ளவத்தையில் இருந்து இப்படி எழுதுகிறாரே; சிவராம் மற்றும் பலரை மறந்து விட்டாரா என்று.
  பிரச்சனை ஏதும் வராமல் வெளியே வரப் பிரார்த்திப்போம்.
  இதற்கெல்லாம் அனானியாகத்தான் பின்னூட்டம் இடலாம்.

 3. யாழ்/Yazh Says:

  இதுதானா சுதந்திரம்? பயங்கரவாத இலங்கை அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

 4. Anonymous Says:

  இவர் தமிழர் என்று ஒரு காரணத்தினாலே கைது. வாழ்க மகிந்த ஜனநாயகம்.

 5. Mike Says:

  நன்றி யாழ், அவர்களே உங்கள் கருத்துக்கு

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails