இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்!

சபாஷ் விஜய் கலக்குங்க. இந்த தினமலர், இந்து எதுவும் அரசியல் சாயம் பூசப்பார்ப்பார்கள். கவலை வேண்டாம் தமிழ் உலகம் உங்கள் பின் எப்போதும்.

இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்கள் தனியாக சென்னையில் எதிர்வரும் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கம் சார்பில் இராமேஸ்வரத்தில் பேரணி, பொதுக் கூட்டம் நடந்தது. அடுத்து சென்னையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் திரையுலகினர் சார்பில் மனிதச் சங்கிலி நடந்தது. கடந்த 1ம் தேதி நடிகர் சங்கம் சார்பிலும், 5ம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சார்பிலும் உண்ணாவிரதம் இருந்தனர்.

நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விஜய், 'இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால் 30,000 பேர்தான் தந்திகள் அனுப்பியதாக பின்னர் திரைப்பட தொழிலாளர் உண்ணாவிரதத்தில் அவரே தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை தமிழருக்காக விஜய் ரசிகர் மன்றத்தினர் தனியாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 16ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் சேகரிடம் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு போலீசாரும் அனுமதி வழங்கியுள்ளனர்.

விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தனியாகப் போராட்டம் அறிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in |

3 comments:

  1. Anonymous Says:

    ஈழத்தில் ஈழத்தமிழ்ர்கள் உடுக்க உடையுமின்றி உறங்க உறைவிடமுமின்றி அல்லல்ப்படும் ஈழத்தின் சொந்தங்களின் வேதனைகளை அறிந்து அவர்களின் கண்ணீரை துடைக்க ஒரு மாபெரும் எளிமையான மனிதனின் (விஜய்) ரசிகர்கள் கை கொடுப்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் அளியாத சுவடுகள்.
    அப்பாவி தமிழர்களின் கண்ணீரை துடைக்க விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருப்பதுஎல்லோருடைய ரசிகர்களும் பெருமை படவேன்டிய விடயம். அன்பார்ந்த மதிப்புக்குரிய ரசிகர் பெருமக்களே நன்றி சொல்ல வார்ததைகளே இல்லயே தளைவா விஜய் ரசிகர்கள் இருக்கும் உன்னதாமான உணவுர்களின் உண்ணாவிரதம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி நன்றி

  2. Anonymous Says:

  3. Anonymous Says:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails