தமிழீழமே தீர்வு அது புலிகளால் மட்டுமே இயலும் - மதுரை ஆதினம்
Posted On Sunday, 9 November 2008 at at 02:13 by Mikeஇப்பவாவது சோ, ஜெ, தினமலர் மனம் மாற வாய்ப்பு உள்ளதா.
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறினார். மதுரை ஆதீனம் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 10-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசும், இந்திய அரசும் ஒன்று கூடி இலங்கை பிரச்சினை பற்றி ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுத்து செயல்படுத்தினால் தான் அங்கு அமைதியை காண முடியும்.
தமிழ் ஈழ மக்கள் அமைதியாக வாழ தனிநாடு ஒதுக்கி கொடுக்க வேண்டும். அப்படி தமிழ் ஈழ மக்களுக்கு தனி நாடு கிடைத்தால் தான் அவர்கள் நல்வாழ்வு பெற முடியும். அந்த தனி தமிழ் ஈழத்தை விடுதலை புலிகளால் தான் பெற்று தர முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
இலங்கை தமிழர் பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அங்குள்ள மக்கள் நல்வாழ்வு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ் இனம் அழிப்பதை தடுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
ஆதினம் அவர்கள் சரியாக சொல்லியுள்ளார். அவரது சொல்லினை போல நடக்கவிரும்பும் உண்மை தமிழன்.
ஆதினம் சொல் செய்தி ஆகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு தமிழன் நம்பிக்கையும் அதுதான்.
உண்மைதான் திலிபன் அவர்களே, அப்படியாவது இவர்கள்(பாப்பு) திருந்த மாட்டார்களா என்ற ஒரு நம்பிக்கைதான் இந்த பதிவு.