இலங்கை ராணுவ வெற்றி நிரந்தரமற்றது

ஏறக்குறைய 1/3 ராணுவம் போரில் காயப்பட்டோ, மரணமடைந்தோ, தப்பி ஒடியோ உள்ள நிலையில் மீதமுள்ளவர்களை வைத்து இவர்களால் பெரிய நிலப்பரப்பை பாதுகாப்பது கடினம், விடுதலை புலிகள் எப்போது வேண்டுமானாலும் ஊடறுப்பு செய்து முன்னேறுவது மிகச்சுலபம்.
இந்த ராணுவ வெற்றிகள் எல்லாம் நிரந்தரமற்றது.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கான காரணம் 'வன்னி நடவடிக்கை" எனப்படும் பெரும் படை நடவடிக்கை ஒன்றை இராணுவம் ஆரம்பித்தது தான். இது முடிவுக்கு வரவில்லை. ஆனால், கடந்த 21 மாதங்களாக இழுபட்டு செல்கின்றது.

எனினும் இந்த நடவடிக்கையை 9 தொடக்கம் 12 மாதங்களில், நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

மிகப்பெரும் படை நடவடிக்கை

இந்த மிலேனியத்திற்கு முன்னர் 18 மாதங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கை ஈழப்போர் வரலாற்றில் நடைபெற்ற எல்லா சமர்களுக்கும் தாய் சமராக விளங்கியது.

ஏனெனில் இராணுவம் மூன்று டிவிசன்களை கொண்ட (53, 55, 56) 30,000 இராணுவத்;;தையும், சிறப்பு படையணி, கொமோண்டோ படையணி என்பவற்றையும், பின்னனி களமுனகளில் ஆயிரக்கணக்கான கடற்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்களையும் பயன்படுத்தியிருந்தது.

இந்த நடவடிக்கையில் பீரங்கிகள், ரி-54, ரி-55 டாங்கிகள், கிபீர், எஃப்-7 மிகையொலி விமானங்கள், எம்ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகள் என்பவற்றின் துணையுடன் அதிகளவு சூடு வலுவையும் பிரயோகித்திருந்தது.

ஆனால், தற்போதைய படை நடவடிக்கையில் இராணுவம் ஐந்து முழுமையான டிவிசன்களையும் (56, 57, 58, 59, 63) இரண்டு பகுதியான டிவிசன்களையும் (61, 62), மூன்று சிறப்பு படையணி றெஜிமென்ட், இரண்டு கொமோண்டோ பிரிவுகள் என்பவற்றையும் பின்னணி களமுனைகளில் இரண்டு டிவிசன்களையும் (டிவிசன்கள்-21-மன்னார், 22-மணலாறு) பயன்படுத்தி வருகின்றது.

வடபோர் முனையில் இரு தாக்குதல் படையணிகள் (53, 55) கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான 12 கி.மீ நீளமான அச்சில் நிலைகொண்டுள்ளன.

கொள்கை ரீதியாக கணிப்பிட்டால் 'வன்னி நடவடிக்கையில்" 60,000 தொடக்கம் 65,000 படையினர், 15,000 மேலதிக படையினரின் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

சூட்டு வலுவும் 'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கையில் பயன்படுத்தியதை விட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம். கனரக பீரங்கிகள், 122 மி.மீ பல்குழல் உந்துகணை செலுத்திகள், ரி-54, ரி-55 ரக டாங்கிகள், கவசத்தாக்குதல் வாகனங்கள், எஃப்-7, கிபீர், மிக்-27 தாக்குதல் வானூர்திகள், எம்ஐ-24, எம்ஐ-35 தாக்குதல் உலங்குவானூர்திகள் என்பவற்றை அரசு பயன்படுத்தி வருகின்றது.

வான்படையின் தாக்குதலும் அதிகம், வன்னி பகுதி மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட குண்டுகளை வீசியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட தற்போதைய நவீன வெடி மருந்தானது 18 கிலோ தொன் ரிஎன்ரி வெடிமருந்துக்கு இணையானது. ஹிரோசிமாவில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் நிறை 13 தொடக்கம் 18 கிலோ தொன் ரிஎன்ரி வெடிமருந்துக்கு ஒப்பானது.

எனவே, ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைகொண்ட வெடிமருந்துகள் வன்னியில் வீசப்பட்டுள்ளன.

பாதுகாப்பு செலவீனங்களை கருத்தில் எடுத்தால் தற்போதைய படை நடவடிக்கையில் அரசு கடந்த 21 மாதங்களில் 267.75 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது (சுள 139.6 டிடைடழைn கழச 2007 யனெ 166.4 டிடைடழைn கழச 2008) இது 'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கையுடன் ஒப்பிடும் போது 300 விழுக்காடு அதிகம் (சுள 46.6 டிடைடழைn கழச 1997 யனெ 57.2 டிடைடழைn கழச 1998). “வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கை காலப்பகுதியில் அரசு 432 மில்லியன் ரூபாய்களை மாதம் ஒன்றிற்கு செலவிட்டிருந்தது. ஆனால், தற்போது அது 1275 மில்லியன் ரூபாய்களை மாதம் ஒன்றிற்கு செலவிட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கு அரசு 500 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாகவும், இதன் படி ஒரு விடுதலைப்புலி உறுப்பினரை கொல்வதற்கு 50 மில்லியன் ரூபாய்களை அது செலவிட்டுள்ளதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். இதுவும் தற்போதைய அதிக செலவுமிக்க போருக்கான ஒரு ஆதாரம்.

மேற்கூறப்பட்ட காரணிகளின் மூலம் தற்போதைய 'வன்னி படை நடவடிக்கை" என்பது ஈழப்போர் வரலாற்றில் மிகவும் நீண்டதும், பெரியதும், அதிக செலவுமிக்கதுமான ஒரு நடவடிக்கை என்ற முடிவுக்கு படைத்துறை அவதானிகள் வந்துள்ளனர். இது உலகில் நடைபெற்ற சமர்களிலும் மிக நீண்ட சமராகும்.

வெளிநாட்டு படைத்துறை உதவிகள்

சிறிலங்காவின் தற்போதைய படை நடவடிக்கை வெளிநாட்டு படைத்துறை நிபுணர்களின் ஒத்துழைப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (பெரும்பாலும் அமெரிக்கா, இந்திய படைத்துறை அதிகாரிகள்). அவர்கள் களமுனைகளுக்கு வெளியில் இருந்து மட்டுமல்லாது களமுனைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த செப்ரெம்பர் மாதம் வவுனியா படை தலைமையகம் மீது வான்புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் இரு இந்திய படை அதிகாரிகள் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் விமானங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், சிறிலங்கா வான்படையின் தாக்குதல்களையும் நெறிப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை இந்தியா தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இதன் பிந்திய நிகழ்வாக, கிளிநொச்சியின் தென்மேற்கு பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் 57-2 ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் செனரத் பண்டாரா அண்மையில் சிறப்பு பயிற்சிக்காக இந்திய சென்றிருந்தார். ஒன்றரை வருடங்கள் அவர் வன்னி களமுனைகளில் பணியாற்றிய பின்னர் இந்தியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு நடவடிக்கையின் பின்னரான ஆய்வு (யுகவநச யுஉவழைn சுநஎநைறள-யுயுசு) என கருதப்படுகின்றது. அமெரிக்க இராணுவம் இத்தகைய நடவடிக்கையின் பின்னரான ஆய்வு செயற்பாடுகளை அறிமுகப்படுத்தியதுடன், அதனை பின்பற்றியும் வருகின்றது. நடவடிக்கை காலப்பகுதியில் ஏற்பட்ட சம்பவங்களை ஆராய்வது அதன் குறிக்கோள், இது வருங்கால நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும்.

சிறிலங்காவின் பொருளாதாரத்தையும், அதன் ஆயுதப்படைகளையும் மேம்படுத்துவதில் இந்தியா, அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் உதவி வருவது தெளிவானது. இதன் மூலம் அவர்கள் பல வழிகளில் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர். மத்திய ஆசியாவின் வளங்களுக்கான நுழைவு வழியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க தலைமையிலான இந்த அணியினர் தமிழ் மக்களின் உரிமைகளை புறம் தள்ளி சிறீலங்கா அரசுடன் இணைந்துள்ளன.

படையினரின் தாக்குதல் நிலை என்ன?

58 ஆவது டிவிசன் பூநகரிக்கு நகர்ந்துள்ளது அது தற்போது பரந்தன் சந்தியை நோக்கி நகர முற்பட்டு வருகின்றது. 57 ஆவது படையணி கிளிநொச்சிக்கு தெற்கே நிலைகொண்டுள்ளது. அது கிளிநொச்சியை அடைந்து 58 ஆவது படையணியுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றது.

இதனிடையே, 62 மற்றும் 63 ஆவது படையணிகள் கிளிநொச்சியில் இருந்து மாங்குளம் வரையிலான பகுதிகளில் மேற்குப்புறமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

59 ஆவது படையணி குமுழமுனையை கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு கடந்த 17 ஆம் நாள் தெரிவித்திருந்தது.

இதனிடையே, 53 மற்றும் 55 ஆவது படையணிகள் முகமாலை களமுனைகளில் இருந்து தென்புறமான நகர முற்பட்டு வருகின்றன.

பூநகரி கைப்பற்றப்பட்டதும், சிறிலங்கா இராணுவம் மாங்குளம், கிளிநொச்சி மற்றும் முகமாலை ஆகிய மூன்று முனைகளில் கடந்த வாரம் (15-17) பாரிய நகர்வுகளை மேற்கொண்டிருந்தது.

பூநகரி கைப்பற்றப்பட்டதனால் விடுதலைப் புலிகளின் உளவுரண் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற கணிப்பில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒரு படை நடவடிக்கையை பொறுத்த வரையில் போரிடும் தரப்பினரின் உளவுரண்; முக்கியமானது.

எனினும், மூன்று நாட்கள் நடைபெற்ற கடுமையான மோதல்களில் இராணுவம் கடும் இழப்பை சந்தித்துள்ளது.

இந்த மூன்று நாட்களில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான படையினர் தென்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் த்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூநகரியை கைப்பற்ற கடந்த சனிக்கிழமை (15.11.08) நடைபெற்ற சமரில் 8 அதிகாரிகளும் 48 படையினரும் கொல்லப்பட்டதுடன், 311 படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மூன்று நாட்களிலும் 256 படையினர் கொல்லப்பட்டதுடன், 611 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும் தினமும் இழப்பு தொடர்பான தகவல்களை வெளியிடுவதை இராணுவம் கடந்த மாதம் முதல் தவிர்த்து வருகின்றது. இது படை நடவடிக்கையை பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து.

நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த 10 மாதங்களில் (ஒக்டோபர் 31 வரை) 1,269 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 9,403 பேர் காயமடைந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. எனினும் படைத்தரப்பின் இழப்புக்கள் அதிகம்.

விடுதலைப் புலிகளின் உத்திகள் என்ன?

விடுதலைப் புலிகளின் உளவுரண்; உயர் நிலையில் உள்ளது என்பதை இந்த சம்பவங்கள் கட்டுகின்றன. முன்னைய அனுபவங்களில் இருந்து விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் மற்றும் தற்காப்பு திட்டங்களை வகுத்துள்ளனர். சில பகுதிகளில் இராணுவம் நகரமுடியாத முன்னனி நிலைகளை அமைத்துள்ளனர். இதுவே அவர்கள் இந்த பெரும் நடவடிக்கைக்கு எதிராக மேற்கொண்டுள்ள தயாரிப்புக்கள். இதன் மூலம் இராணுவத்தை பெரும் பிரதேசத்தில் உள்வாங்கி தாக்குவது அவர்களின் உத்தி. அவர்கள் பெரும் சமருக்கு தயாராகி வருகின்றனர். தமது படைவளங்களை பெரும் மரபு வழி சமருக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றனர். புதிய படையணிகளையும், கனரக ஆயுத பிரிவுகளையும் (பீரங்கி, மோட்டார், டாங்கி எதிர்ப்பு, விமான எதிர்ப்பு படையணிகள்) அவர்கள் பின்னிருக்கையாக கொண்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் போரியல் உத்திகள் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு நீண்ட அனுபவம் உண்டு. இது அவர்கள் முன்னைய சமர்களில் இருந்து பெற்றுக்கொண்டது. இதன் அடிப்படையிலேயே அவர்கள் தமது வளங்களை தக்கவைத்து வருகின்றனர்.

இராணுவத்தின் தாக்குதல் உத்திகளின் குறைபாடுகள்

இராணுவம் பலமுனை அழுத்தங்களை விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்த முனைந்து வரும் போதும் மறுபுறமாக அவர்கள் நீண்ட நிலப்பரப்பில் பரவலடைந்துள்ளனர்.

58 ஆவது மற்றும் 21 ஆவது டிவிசன்கள் 82 கி.மீ நீளமான ஏ-32 நெடுஞ்சாலையை தக்கவைப்பதற்கு முயன்று வருகின்றன.

62 மற்றும் 63 ஆவது டிவிசன்கள் கிளிநொச்சி தொடக்கம் மாங்குளம் வரையிலான 50 - 60 கி.மீ நீளமான களமுனையில் நகர முற்படுகின்றன. 22, 57 மற்றும் 59 டிவிசன்கள் கொக்குத்தொடுவாய் தொடக்கம் மன்னாரின் கரையோரம் வரையிலான 115 கி.மீ நீளமான களமுனைiயும், அக்கராயன் தொடக்கம் கிளிநொச்சி வரையிலான களமுனைகளையும் தக்கவைக்க முயல்கின்றன.

வடபோர் முனையில் 53 மற்றும் கடந்த சனிக்கிழமை (15.11.08)55 ஆவது டிவிசன்கள் 12 கி.மீ நீளமான பகுதியை பாதுகாத்து வருகின்றன. வவுனியாவின் வடபுறம் 56 மற்றும் 61 ஆவது டிவிசன்கள் 20 - 25 கி.மீ நீளமான முன்னனி நிலையை கொண்டுள்ளன.

கொள்கை ரீதியாக, இராணுவம் 275 தொடக்கம் 290 கி.மீ நீளமான முன்னனி நிலைகளை கொண்டுள்ளது. இந்த பகுதிகளின் புவியியல் அமைப்பை கருதினால் இந்த களமுனைகளை நீண்டகாலம் தக்கவைப்பது சாத்தியமற்றது. விடுதலைப் புலிகள் இந்த முனையின் எந்த புள்ளியிலும் இலகுவான ஊடறுப்புக்களை மேற்கொள்வதன் மூலம் இராணுவத்தை பொறிக்குள் சிக்க வைக்க முடியும்.

மேலும் தற்போதைய நடவடிக்கையில் இராணுவம் அதிகளவான படையினரை இழந்து வருகின்றது. கடந்த 10 மாதங்களில் 1269 பேர் கொல்லப்டப்டதுடன், 9403 பேர் காயமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ள போதும் இந்த நடவடிக்கையின் மொத்த இழப்பு மிக அதிகம். இந்த காலப்பகுதியில் 25,000 படையினர் தப்பியோடியுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவித்துள்ளது.

அரசு இழப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் போது குறைத்தே வெளியிடுவதுண்டு. அவற்றில் காணாமல் போவோர், படையில் இருந்து தப்பியோடியவர்கள் தெரிவிக்கப்படுவதில்லை. இதுவும் முன்னணி நிலைகளை தக்கவைப்பதில் இராணுவத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.

படை நடவடிக்கைக்கு பின்னால் உள்ள அரசியல் அனுகூலங்கள்

விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் என அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் அதுவல்ல. அரசுக்கு பல வேறு நோக்கங்கள் உள்ளன. வன்னியில் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் தயக கோட்பாட்டுக்கான புவியியல் அமைப்பை சிதைத்து விடுவது ஒரு திட்டம்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் படை கட்டமைப்புக்கள், நிர்வாக கட்டமைப்புக்கள் என்பன உண்டு அதனை தக்கவைப்பதற்காக விடுதலைப் புலிகள் படை நடவடிக்கைளை மூர்க்கமாக எதிர்ப்பார்கள்.

எனவே, வலிந்த தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகளை களமுனைகளுக்கு இழுத்து அவர்களின் பலத்தை அழித்து விடலாம் என்பது இரண்டதவது உத்தி.

எனவே தான் அரசு அதிக படை வளத்தையும், சூட்டு வலுவையும் பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளின் படைபலத்தை அழித்து தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு இராணுவ ரீதியில் நிரந்தர தீர்வை கண்டுவிட அரசு முயல்கின்றது.

மேலும் இந்த போர் வெற்றிகளின் மூலம் தென்னிலங்கையில் தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவும் அரசு முயல்கின்றது. அவை தான் தற்போதைய படை நடவடிக்கைகளின் பின்னால் ஒளிந்துள்ள திட்டங்கள்.

படை வளம், ஆயுத வளம், பொருளாதார வளம் மற்றும் வெளிநாட்டு உதவிகள் என்பவற்றால் அரசு வலுவாக உள்ளது.

எனவே படை வலுச்சமநிலை அரசுக்கு சார்பாகவே உள்ளது. ஈழப்பிரச்சனைக்கு எதிரான இந்த இணைந்த திட்டங்களை முறியடிப்பதற்கு உலகத் தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும். இதுவே தற்போது கொதி நிலையில் உள்ள சம்பவம். களமுனைகளுக்கு அப்பால் இது மெல்ல மெல்ல வலுப்பெற்றும் வருகின்றது.

தமிழ் நாட்டின் எழுச்சி முக்கியமானது, தமிழ் மக்களின் துணிவும், அர்ப்பணிப்பும் தமிழ் மக்களின் உரிமையை பெறுவதற்கான சக்திவாய்ந்த ஆயுதம். அதுவே விடுதலைப் புலிகளின் வலிந்த சமருக்கு முன்னால் உள்ள முக்கிய காரணியுமாகும்.

இந்த கட்டுரை சிறிலங்கா கார்டியன் இணையத்தளத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழ் வடிவமாகும்.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    தமிழரென்று கூறிக் கொண்டு தமிழினத்துக்காக போராடுவதற்கு, ஆதரவாக இருப்பதற்கு எதிராக எச்சில் உமிழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறானே அதுதான் தமிழன்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails