அடைக்கலம் தேடும் சிட்டுக்குருவிகள்(ஈழத்தமிழர்கள்)
Posted On Friday, 7 November 2008 at at 10:43 by Mikeதினமலரில் வெளியான இந்த கட்டுரை, சிட்டுக்குருவிகள் நிலைமைதான் ஈழத்தமிழர்களின் நிலையும் அதைவிட ரொம்ப மோசமானது, சிட்டுகுருவிக்கு கரிசனம் காட்டும் தினமலரே ஏன் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது பத்தி மட்டும் வாய் கூசாமல் இன அழிப்புக்கான அனைத்து வேலைகளிலும் இறங்குகிறாய். இது மட்டும் இந்த தினமலருக்கு மண்டையில் ஏறமாட்டேங்குது. அப்படி என்னதான் இவனுக்கு தமிழங்களை அழியறதை பார்க்கறதுல ஒரு சந்தோசமோ. நல்ல வேலை சிட்டுகுருவியிம் தமிழாய் இருக்கவில்லை, உன் வேலையை அதனிடம் காட்டுவதற்கு.
நீலகிரி : சாம்பல் நிறம் கொண்ட சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள், வீட்டின் மேற்கூரை இடுக்குகளில் கூடு கட்டி வசிக்கும். பழங்காலம் முதலே சிட்டுக் குருவிகளுக்கும், மனிதர்களுக்குமான பந்தம் தொடர்கிறது. "குருவி கூட்டைப் பிரித்தால் அந்த குடும்பமும் பிரிந்து விடும்' என்பது இன்னமும் மாற்ற முடியாத நம்பிக்கையாக உள்ளது. மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும் கூட, "கீச் கீச்' என்று இனிமையான சத்தத்துடன் இங்கும் அங்குமாக பறந்து திரியும் சிட்டுக்குருவிகளைக் காண்பது தற்போது அரிதாகி விட்டது. மனிதருடன் நெருங்கிப் பழகும் குணம் கொண்ட சிட்டுக்குருவிகள், வீடுகளில் பெண்கள் அரிசியை புடைக்கும் போது சிதறும் அரிசி, தானியங்களையும், சிறிய புழு, பூச்சிகளையும் உண்ணும்.
சிட்டுக்குருவியின் விலங்கியல் பெயர், "பாஸ்டர் டொமஸ்கஸ்.' பல ஆண்டுகளுக்கு முன், கூட்டம் கூட்டமாக வசித்து வந்த இவை மாயமாகி வருகின்றன. விளைநிலங்கள் குறைவது; தானியங்கள் கிடைக்காதது; நகர்மயமாதல்; ஓட்டு வீடுகள் கான்கிரீட் கட்டடங்களாக மாற்றப்படுவது ஆகியவையே சிட்டுக்குருவிகள் அழிவின் பிடியில் சிக்கியுள்ளதற்கு காரணங்கள். சிட்டுக்குருவிகளின் மேல் அதிகமான காதல் கொண்ட பலர், வீடுகளில் அவற்றிற்கான கூடுகளை அமைத்து, அவற்றின் வரவிற்காக காத்திருக்கின்றனர். ஊட்டி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சிலர், கடைகளின் முன் சிட்டுக்குருவிகள் கூடு கட்ட வசதியாக இடங்களை தயார் செய்துள்ளனர். பானை, ஷூ பாக்ஸ் ஆகியவற்றில் துவாரம் செய்து வைக்கோல் பரப்பி, குருவிகள் வசிக்கவும் வழி செய்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் சிட்டுக்குருவிகள் இனம், தற்போது பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது, விலங்கியல் ஆர்வலர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=639&cls=