ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை!
Posted On Friday, 7 November 2008 at at 05:40 by Mikeஇனப் படுகொலையை மறைத்துவிட்டு, இது ஏதோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செய்யப்படும் முயற்சி என்று தமது மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு திசை திருப்பி, மனிதநேயத்தைத் துறந்தவர்களாகவே காட்சி அளிக்கின்றனர்.
சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்கு தங்களது இனப் படுகொலையை மறைக்க, ராஜீவ் காந்தி கொலைபற்றி இப்போது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகக் கூறி, மூக்கைச் சொறிந்துவிடலாம் என்று பார்க்கிறார்கள்!
முன்பு ராஜீவ் - ஜெயவர்த்தனே செய்த இந்திய - இலங்கை உடன்பாட்டையொட்டி, கொழும்புக்குப் போன பிரதமர் ராஜீவ் அவர்கள், இராணுவ மரியாதை பெறும் அணிவகுப்பின்போது நடந்து வந்த அவரை, சிங்கள வெறியுடன் துப்பாக்கிக் கட்டையால் தாக்கிட, சிங்கள இராணுவ வீரன் முயன்றபோது, அவர் திடீரென குனிந்த காரணத்தினால் அன்று உயிர் தப்பினார்; இவ்வளவு பெரிய குற்றத்திற்குரிய - கொலை முயற்சி வழக்குக்கூட நடத்தாமல், லேசான தண்டனை கொடுத்து, சிறையில் சில காலமிருந்த அந்த சிங்கள சிப்பாய், தேர்தலிலும் நிற்கும் அளவுக்கு அவருக்குப் பின்னால் சில சிங்கள சக்திகளே இருந்ததை மறைத்துவிடவும், மறந்துவிடவும் முடியுமா?
பல லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பறிகொடுத்து, சொந்த நாட்டிலேயே அகதிகளாய் பஞ்சப் பராரி களாக காடுகளில் வாழும் வெங்கொடுமைக்கு ஆளாகித் தவிப்பதா என்பதே இப்போதுள்ள பிரச்சினை.
அதைப் பார்த்து மானமும், மனிதநேயமும் உள்ள தமிழ் உறவுகள் கைபிசைந்து வேடிக்கை பார்க்க முடியுமா?
சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்கு தங்களது இனப் படுகொலையை மறைக்க, ராஜீவ் காந்தி கொலைபற்றி இப்போது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகக் கூறி, மூக்கைச் சொறிந்துவிடலாம் என்று பார்க்கிறார்கள்!
சபாஷ்..
sariyana thalaipu.