பிரபாகரனை கடவுளாக ஏற்க தயார் - நாஞ்சில் சம்பத்

ஆயுதம் எந்திய பிரபாகரனை கடவுளாக ஏற்றுக்கொள்ள தயார் என்று ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. சிங்களர்கள், ஈழத் தமிழர்கள் ஒரே கூரையில் வசிக்க முடியாது.

சூரபத்மனை வதம் செய்த கடவுள் முருகப்பெருமான், ஆயுதம் ஏந்தித்தான் பிரச்சினையை முடித்தார்.

அதேபோல் ஆயுதம் ஏந்திய பிரபாகரனை கடவுளாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.

உலக நன்மைக்காக போராடுபவர்கள் தேசத் தியாகிகள். தமிழகத்தில் போராடுபவர்களை தேசத் துரோகிகள் என்று கூறுகின்றனர்.

சிங்களத்துக்கு ஆயுதங்களை கொடுக்காதீர்கள் என்று கேட்கிறோம்.

தலை நிமிர்ந்து சொல்கிறேன். தனி ஈழம் என்ற குழந்தை உருவாகும்.

நாங்கள் பேசினால், தடை செய்யப்பட்ட இயக்கம் குறித்து பேசுவதாக கூறுகின்றனர்.

அந்தத் தடையை தரைமட்டமாக்குவோம் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்றார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails