முதல்வர் போட்ட போடு, டெல்லி பரபரப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யணும்னு தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து நிறைவேற்றியிருப்பதை பத்திரிகையாளர்களும் அரசியல் நோக்கர்களும் உன்னிப்பா கவனிக்கிறாங்க.''“

""அ.தி.மு.க. உள்பட தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஒற்றுமையா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது அகில இந்திய அளவில் கவனத்தை கவருகிற விஷயமாச்சே!''“

""அதோடு, டெல்லியில் நவம்பர் 13-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே, போர் நிறுத்தம் இல்லைன்னு சொன்ன பிறகு, 14-ந் தேதியன்னைக்கு தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் பேசியிருப்பதும் டெல்லி வரைக்கும் கவனிக்கப்பட்டிருக்குங்க தலைவரே... .. தமிழர்கள் மீது போடப்படுகின்ற குண்டு, விடுதலைப்புலிகளின் மீதும் போடப் படுகின்ற குண்டுதான். இருவரையும் ஒரு சேர அழிக்கத்தான் இந்த யுத்தத்ததை ராஜபக்சே அங்கே நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு புரியாமல் இல்லை. அவர் ஏன் அதற்கு கெடு கேட்கிறார் என்பதும் நமக்கு நன்றாகப் புரிகிறது. இதில் நாம் ஏமாந்துவிடக்கூடாது என்று மத்திய அரசுக்கு இந்த மாமன்றத்தின் சார்பாக என்னுடைய வேண்டுகோளை எடுத்துவைக்க கடமைப்பட்டிருக்கிறேன்னு முதல்வர் பேசினார்.''“

""அதே பேச்சில், நம்முடைய பிரதமர் இலங்கை அதிபருக்குச் சொல்லலாம். உங்களுக்குப் பிடிக்காதது விடுதலைப் புலிகள்தானே, தீவிரவாதிகள்தானே? எல்லாநாட்டிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் இல்லையா, பாகிஸ்தானில் இல்லையா? அமெரிக்காவில் இல்லையா? இங்கிலாந்தில் இல் லையா? அங்கெல்லாம் தீவிரவாதிகள் இருக்கிறார் களென்றால் அந்த நாட்டு மக்கள் மீதே குண்டு போட்டுக் கொண்டா இருக்கிறார்கள்? இதை ராஜபக்சேவுக்கு நமது பிரதமர் எடுத்து சொல்ல வேண்டும்.கேட்காவிட்டால், பிறகு என்ன என்பதை யோசிப்போம் என்று அவர் சொல்லவேண்டும்னு முதல்வர் சொல்லியிருக்காரே!''“

""ஆமாங்க தலைவரே.. சட்டமன்ற உரையின் கடைசியில், அறப்போர் முறையிலே ஈழத்தமிழர் களைக் காப்பாற்ற முடியுமென்றால் அதற்கு நாம் தயாராக இருப்போம். நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் சொன்னதைப் போல பதவிகளைத் துறக்கவும் தயாராக இருக்கி றோம்னு முதல்வர் பேசியிருப்பது டெல்லி வரைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜபக்சே சந்தித்தபோதுகூட இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பா எதுவும் வலியுறுத்த லைங்கிறதுதான் டெல்லியிலிருந்து எனக்கு கிடைத் திருக்கிற தகவல். இந்த நிலைமையில், முதல்வரின் சட்டமன்றப் பேச்சு டெல்லியில் ஹாட் டாபிக் ஆகியிருக்கு. ஏற்கனவே எம்.பிக்கள் ராஜினாமான்னு நெருக்கடி வந்ததுபோல, இப்போது பதவித் துறப்புங்கிற நெருக்கடியை கலைஞர் கையிலெடுத் திருக்கிறார்னு டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு நிலவுது.''“

""டெல்லியைப் போல தமிழகம், இலங்கை பிரச்சினை தொடர்பா அமைதியா இருக்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியிருக்காங்க. பழ.நெடுமாறன் சட்டமன்றம் முன்னாடி ஆர்ப்பாட்டம் செய்ய வந்து கைதானாரு கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழகக் கிளை சார்பா, கண்ணீர் தூதுவன்ங்கிற சிறப்பு ரயிலில் நாடாளு மன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தோழர்கள் போயிருக்காங்க. விஜய் தன் ரசிகர்களோடு 16-ந் தேதி உண்ணாவிரதம் இருக்கிறார். அதோடு, ஐ.டி. துறையில் உள்ளவர்களும் போரை நிறுத்துன்னு பனியன் போட்டுக்கொண்டு 17-ந் தேதியன்னைக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போறாங்க. இதில் கமல், சத்யராஜ், சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற பிரபல நட்சத்திரங்களும் கலந்துக்குறாங்கப்பா.''“

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails