20 ஆயிரத்திற்கு அதிகமான மாணவர்கள் பங்கேப்பு : இந்திய நாடாளுமன்ற முன் கண்டனப் பேரணி

ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தத்தைக் ஏற்படுத்துமாறும் வலியுறுத்தி இந்தியாவின் நாடாளுமன்றம் முன்பாக 20 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களினால் கண்டனப் பேரணி இடம்பெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவின் 20 மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த கண்டனப் பேரணியில் பங்கேற்றுள்ளனர். இப் பேரணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் அழைப்பு விடுத்தது.

அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவர் உமன் ஜீனு ஜக்காரியா இப்பேரணிக்குத் தலைமை தாங்கினார். பேரணி சாலை ஊடாக நாடாளுமன்ற முன்றலில் நிறைவடைந்தது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் விளக்கும் பதாதைகளும், கண்ட சொற்கட்டுகளையும் தாங்கியவாறு பேரணி பெரு முழக்கத்துடன் பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, மகளிர் சங்க செயலாளர் ஆனிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

http://www.pathivu.com/news/532/34/20/d,view.aspx

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails