வெளியுறவு அமைச்சர் ஆகிறார் ஹிலாரி? --நமது மக்களின் வாழ்வில் மாற்றம் வருமா
Posted On Saturday, 15 November 2008 at at 13:51 by Mikeஎன்னங்க பண்றது, இந்திய தாய் நம்மை காப்பற்ற போவதில்லை அந்த தாயே ஆயுதங்கள் கொடுத்து தமிழ் மக்கள் உயிர்களையும், உணர்வுகளையும் கொஞ்சம், கொஞ்சமாக கொன்று சிங்களனிடம் கூறு போட்டு விற்கிறாள், இந்த அமெரிக்க தாயாவது ஏதும் தமிழர் வாழ்வில் ஒளியேற்றுகிறாரா பார்ப்போம்.
அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமாவின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பான வெளியுறவு அமைச்சர் பதவி ஹிலாரி கிளிண்டனுக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அதிபராக பதவியேற்கிறார். இந்த நிலையில் அமைச்சர்கள் யார் யார் என்ற பரபரப்பான பேச்சுக்கள் தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளன.
அதிபர் வேட்பாளருக்கு ஒபாமாவுடன் போட்டியிட்ட பெரும் சவாலாக விளங்கிய முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரிக்கு வெளியுறவு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்ற பேச்சு உலா வரத் தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே இவர் பெயர் அடிபட்டது. ஆனால் பின்னர் அமுங்கியது. தற்போது மீண்டும் அவரது பெவயர் அடிபடத் தொடங்கியுள்ளது. இந்தத் தகவலை ஆட்சி மாற்றக் குழுவில் இடம்பெற்றுள்ள இரண்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியுறவு அமைச்சர் பதவிக்கு சுக் ஹேகல், ஜான் கெர்ரி, பில் ரிச்சர்ட்சன் ஆகியோரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது புஷ் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக கண்டலிசா ரைஸ் என்ற பெண்மணி இருப்பது குறிப்பிடத்தக்கது.