19 கோடியை தாண்டியது இலங்கைத் தமிழருக்கான நிவாரண நிதி
Posted On Sunday, 9 November 2008 at at 11:29 by Mikeதமிழர்களை விட சிறந்தவர்கல் யாருமில்லை தானத்தில், அவனுக்கு வரும் சோதனைகள் போல் யாருக்கும் வருவதில்லை. தமிழனை போட்டு இந்த பாடு படுத்தும் ராசபக்சே, தினமலர்,சோ,சாமி, ஜெ எல்லாம் கொஞ்சம் திருந்துங்கய்யா.
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிதி வசூல் 19 கோடி ரூபாவையைத் தாண்டியது. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவி அளிக்க முதல்வர் கருணாநிதியிடம் நேரடியாக நன்கொடை வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று வரை 19 கோடி ரூபாய் வசூலாகி இருந்தது.
மின் வாரியம் சார்பில் அனைத்து தொழிற்சங்ககளும் இணைந்து மூன்று கோடி ரூபாய், தமிழ்நாடு பொறியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஜேப்பியார் ஒரு கோடி ரூபாய், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக துணைவேந்தர் மன்னர் ஜவகர் இரண்டாவது தவணையாக 10 இலட்சம் ரூபாய், சக்தி நிறுவனங்கள் சார்பாக பொள்ளாச்சி மகாலிங்கம் 10 இலட்சம் ரூபாய், தமிழ்நாடு பொதுப்பணித் துறை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 38 இலட்சத்து 78 ஆயிரத்து 470 ரூபாய், ஜெ.பி.ஜெ. சி சிட்டி டெவலப்பர்ஸ் சார்பில் ஜஸ்டின் தேவதாஸ், கோவை பி.எஸ்.ஜி. அண்ட்சன்ஸ் அறக்கட்டளை ரெங்கசாமி தலா ஐந்து இலட்சம், கோவை ஜி.ஆர். ஜி. அறக்கட்டளை சார்பில் ரெங்கசாமி இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் சிறைத் துறை சார்பில் உள்துறைத் துறைச் செயலர் மற்றும் டி.ஜி.பி. நடராஜ் மூலம் ஐந்து இலட்சத்து 91 ஆயிரத்து 555 ரூபாய், கெம்ளாஸ்ட் சன்மார் சார்பில் விஜயசங்கர் 10 இலட்சம் ரூபாய், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததார்கள் சங்கம் இரண்டு இலட்சத்து 500, தலைமைச் செயலக சங்க இரண்டாவது தவணையாக இரண்டு இலட்சம் ரூபாய், திறந்தவெளி பல்கலை சார்பாக ஒரு இலட்சம் ரூபாய், கமலா தியேட்டர் சிதம்பரம் ஒரு இலட்சம், தொழிலதிபர் கணேஷ் குமார் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம், கயல்விழி வெங்கடேசன் 50 ஆயிரம் தென்சென்னை தி.மு.க. மாவட்ட செயலர் அன்பழகன் 50 ஆயிரம், மின் கழகக் கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம் 50 ஆயிரம், கதிர்கிராமத் தொழில் வாரிய பணியாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஜோசுவா செல்லப்பா50 ஆயிரம், கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் சார்பில் இரண்டு இலட்சத்து ஐந்தாயிரத்து 864 ரூபாய், காவல்துறை வீட்டு வசதிக் கழக ஒப்பந்ததாரர்கள் சங்கம் ஒரு இலட்சம், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
நிவாரண நிதியை அனுப்பணும்னா எந்த அக்கௌன்ட் நம்பருக்கு பணத்தை அனுப்பனும்?
நன்றி ஜுர்கேன் க்ருகேர், உதவுங்கள் உங்களாமல் முடிந்த வரை
SRILANKAN TAMILS RELIEF FUND
எனும் தலைப்பில்
காசோலைகளையும், வரைவுக் காசோலைகளையும் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமைச்
செயலாளர், தமிழக அரசு, தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009