சாப்பாடு போட்டு அடிக்க முடிவு பண்ணிட்டானுங்க போல இருக்குது.

சாப்பாடு போட்டு அடிக்க முடிவு பண்ணிட்டானுங்க போல இருக்குது.

இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, 800 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு புதுடெல்லி வந்த பஸில் ராஜபக்ஷ அவர்கள், இன்று காலை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.


பசில் ராஜபக்ஷ
சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த பஸில் ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்துக் கேட்டபோது, பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது என்றார்.

இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசிடம் ஏதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று அவரிடம் கேட்டபோது,
``எல்லா உத்தரவாதங்களையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதாவது, மனிதாபிமானத் தேவைகள் உள்பட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என உறுதியளித்திருக்கிறோம்’’ என்றார் பஸில் ராஜபக்ஷ அவர்கள்.

பின்னர் வெளியிட்பபட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வடக்கே நடைபெற்று வரு்ம் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் புலம் பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக இந்தியா தனது கவலைகளை வெளியிட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி சென்றடைய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் நலன் மற்றும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தொடர்பாக இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக பஸில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியத் தரப்பிடம் விளக்கினார். இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் 13 வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

நிலையான தீர்வு காண்பதற்கான அரசியல் நடைமுறைகளை மேற்கொள்வதில் இலங்கை ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் கிழக்கே ஜனநாயக நடைமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பஸில் ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    உங்களுடைய பதிவுகள் போற்றத்தக்கது. கலைஞரின் சாயம் வெளுத்துப் போயிற்று. இனியாவது கலைஞரைப் பிடித்து தொங்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அப்படித்தொங்கும் நிலை ஏற்பட்டால் நீங்கள் கலைஞரின் அடி வருடியே என்னும் எண்ணம் எல்லோருக்கும் வரலாம். சிந்தியுங்கள். அவர் தமிழகத்தின் அரசியல் வியாதி.ஈழத்தமிழருக்காக எவ்வளவு வேண்டும் என்றாலும் எழுதுங்கள் ஆதரிக்கிறோம்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails