தமிழர்களே உறுதியாக நில்லுங்கள். உணர்வோடு நில்லுங்கள். ஒற்றுமையோடு நில்லுங்கள்
Posted On Sunday, 26 October 2008 at at 03:09 by Mikeஎதிரி நம் இனத்தை கொல்ல எப்படி எல்லாம் பழி போடுவான் என்று பாருங்கள்.
இவன் குண்டு போடறது செஞ்சோலை பள்ளி, மருத்துவமனை மக்கள் குடியிருப்பு இவைகளே.
தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களை கண்டித்து பேரணிகளை நடத்துவதற்கு ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து சிங்கள மக்களை ஒன்றுதிரட்டி வருகின்றன.
ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களினால் சிறிலங்காவின் இறைமை இரண்டாக பிளவுபடும் என சிங்கள கிராமங்களில் ஜே.வி.பி. பிரசாரம் செய்து வருகின்றது.
புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பயங்கரவாதத்தை தூண்டும் செயல் என்பதை அனைத்துலக நாடுகளுக்கு வெளிக்காட்டும் வகையில் சிங்கள மக்கள் எழுச்சியடைய வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்படுகின்றது.
போரில் புலிகள் தோல்வியடைந்து வருகின்றனர். அதனை மூடி மறைப்பதற்காகவே தமிழக முதலமைச்சர் கருணாநிதி போராட்டங்களை நடத்தி வருகின்றார் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பௌத்த பிக்குமார் பௌத்த ஆலயங்களில்; சிங்கள மக்களுக்கு கூறி வருகின்றனர்.
சிங்களவர்கள் ஒன்று திரண்டு எழுச்சியடையவில்லையானால் புலிகள் தமிழீழத்தை பெற்றுவிடுவார்கள் என்றும் ஆகவே சிங்கள் மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் பிக்குமார் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
http://www.youtube.com/watch?v=vNJQG4zEz44