கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்
Posted On Saturday, 25 October 2008 at at 13:58 by Mikeஎன்ன கொடுமை இது, குண்டு போட்டால் அதில் உயிர் பிழைத்தவர்களை காப்பற்ற உள்ள ஒரே இடமும் இப்போது அந்த குண்டுக்கு பழியாகி விட்டதே. என் இனத்தை கொல்லும் இந்த அரக்கணை யாரும் கேட்க மாட்டீர்களோ.
தமிழருக்குகும், ஈழதமிழருக்கும் பகிரங்க கடிதம் எழுதும் பெரியவரே உங்கள் கடிதத்தை முதலில் யுத்த அரக்கணுக்கு எழுதுங்கள்.
பொது மருத்துவமனை மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் வீசிய எறிகணைகள் மருத்துவமனையின் வாசல் மற்றும் மதிச்சுவர் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.
இதனால் அப்பகுதி இடிந்து சேதமாகியுள்ளது.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலால் மருத்துவமனையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் மற்றும் பணியாளர்கள் பெரிதும் அச்சமடைந்தனர்.
மருத்துவமனையின் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக மருத்துவமனையின் பொறுப்பதிகாரி மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நன்றி : http://www.puthinam.com/full.php?2e1VoA00aecYU2edKA4S3bce6D74d4D1e3cc24mI3d43YOA2a03oMV3e
:(