சன் ' டிவி', தினகரன் உள்நோக்கம் : எதிர்த்து ஐகோர்ட்டில் தினமலர் வழக்கு

நல்ல காமெடி உள்நோக்கம் பத்தி பேசறது யாரு, அடப்பாவி தினமலரே தமிழ் மக்கள் அழியறதுக்கு என்னமா ஒ போடற இலங்கைக்கு, உனக்கு நல்ல வேண்டும். தயாநிதி மாறன் ஐயா இவனுங்களை சும்மா விடாதீங்க. இவன் எழுதினால் பத்திரிக்கை தர்மம் அடுத்தவன் எழுதினால் உள்நோக்கமா. தன்னோட தொழில் வருமானம் குறைஞ்சுடுமாம், தமிழ் துரோகிகள் எப்படி போனால் எங்களுக்கென்ன.

சென்னை: "தினமலர்' பத்திரிகைக்கு எதிராக செய்தி வெளியிட, சன் "டிவி' மற்றும் தினகரன், தமிழ்முரசு பத்திரிகைகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி ஜெயபால் முன் விசாரணைக்கு பட்டியலிட, ஐகோர்ட் "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது."தினமலர்' பத்திரிகையின் வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் எந்த விஷயத்தையும் வெளியிடக் கூடாது என சன் "டிவி' மற்றும் தினகரன், தமிழ் முரசு பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கக் கோரி "தினமலர்' பங்குதாரர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


உள்நோக்கத்தோடு செயல்படும் சன் "டிவி', : இந்த வழக்கு தொடர்பாக, சன் "டிவி', கல் பப்ளிகேஷன்ஸ், கலாநிதிமாறன், ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில், "தினமலர்' சார்பில் மூத்த வக்கீல் டி.வி.ராமானுஜன் மற்றும் வக்கீல் இளம்பாரதி ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி மற்றும் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் முன் ஆஜராகி, ""தொடர்ந்து, "தினமலர்' பத்திரிகையின் வர்த்தகத்தைப் பாதிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு செயல்படும் சன் "டிவி', தினகரன் மற்றும் தமிழ்முரசு பத்திரிகைகளின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டு, நீதிபதி ராஜேஸ்வரன் முன் விசாரணையில் உள்ளது.


இந்நிலையில், "தினமலர்' பத்திரிகையின் வேலூர் பதிப்பில் இலவச இணைப்பாக வெளியான "கம்ப்யூட்டர் மலர்' புத்தகத்தில், இன்டர்நெட் படம் ஒன்று பிரசுரம் செய்யப்பட்டது. அதைக் கண்டித்து, முஸ்லிம்கள் போராட்டங் கள் நடத்தி வருகின்றனர்.""இந்த சம்பவத்தை சன் "டிவி', தினகரன் மற்றும் தமிழ் முரசு ஆகியவை தினமலர்' வர்த்தகத்தைப் பாதிக்கும் விதத்தில், செய்தி என்ற போர்வையில் வெளியிட்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை, மாநிலம் முழுவதும் பரவுவது போல் செய்தி ஒளிபரப்பி வெளியிடப் படுகிறது.


விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது: இந்த சம்பவம் குறித்து, "தினமலர்' வருத்தமும் தெரிவித்துள்ளது. மேலும், "தினமலர்' முஸ்லிம்களுக்கு எதிரான பத்திரிகையல்ல. எனவே, இதுபோல் செய்திகள் வெளியிட சன் "டிவி', தினகரன் மற்றும் தமிழ்முரசு பத்திரிகைகளுக்குத் தடை கோரிய மனு மீது இந்த வழக்கில் அவசர உத்தரவு பிறப்பிக்கவேண்டும்,'' எனக் கோரினார்.இக்கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி மற்றும் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய "முதல் பெஞ்ச்', இதுதொடர்பான வழக்கை, நீதிபதி ஜெயபால் முன் இன்றைக்கு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails