வன்னேரியில் படையினரின் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 25 படையினர் பலி; 85 பேர் காயம்

தினமும் குறைந்தது ஒரு 25 ஆட்களாவது சாவதுன்னு முடிவு பண்ணிட்டானுங்க போல, தமிழனை அழிக்க நினைப்போரின் அழிவை யாரால் தடுக்க முடியும். எத்தனை ராடார் , ஆயுதங்கள் வாங்கினாலும் இதுதான் கதி.


வன்னேரிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 85 படையினர் காயமடைந்துள்ளனர். படையினர் இரு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வன்னேரிப்பகுதியில் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொண்டனர்.

படையினரின் இத்தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான தாக்குதலை நடத்தினர்.

இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 85 படையினர் காயமடைந்தனர். படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails