ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு

ஜெயலலிதா வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கருணாநிதி திருந்த வேண்டும் இதை பார்த்தாவது, அல்லது எங்களுடைய ஓட்டு ஜெ.க்கே.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அகில இந்திய கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று சனிக்கிழமை (27.09.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கைத் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வலியுறுத்தியும், இலங்கைத் தமிழ் மக்களின் உயிர், உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்திட வலியுறுத்தியும், தங்கள் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2008 வியாழக்கிழமை அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதை தெரிவித்து, அன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும், அதேபோல் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும் தாங்கள் அழைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அன்றைய தினம் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ளேன். அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில் 02.10.2008 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு.சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொள்வார்.

மேலும், தாங்கள் கேட்டுக்கொண்டது போல், மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளை முன்வைத்து தங்கள் கட்சியின் சார்பில் நடத்தப்படவுள்ள உண்ணாவிரதப் போராட்டங்கள் வெற்றிபெற எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விபரங்களுக்கு http://www.puthinam.com/full.php?2b44OO44b3aU6DR34d31VoA2a03e4AKe4d3YImAce0de0MtHce0df1eo2cc0IcYA3e

Posted in |

6 comments:

  1. Unknown Says:

    வேற, கம்யூனிஸ்ட்கள் விஜயகாந்த் பக்கம் போகாமல் தடுப்பது எப்படியாம்?

    :-)))

  2. செம்மலர் செல்வன் Says:

    அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்கள் எதிர்கால கூட்டணிக்கு அச்சாரம் போடுவதற்காக மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்கள் மேலுள்ள பாசத்தோடு இதனை கூறி இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.. புரட்சி கலைஞர் விஜயகாந்த நம்ம தோழர்கள் அழைக்கவில்லையா?

  3. Mike Says:

    நல்லது செய்பவர்கள் அனைவரையும் சந்தேக கண்ணோடு பார்ப்பது அழகல்ல. ஜே.உஇன் ஈழதமிழர் மேலுல்ல பாசத்தை வரவேற்போம், இது அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. எந்த கூட்டணிக்காக அவர் சொல்லி இருந்தாலும் அவரை வரவேற்போம். எமக்கு தேவை தமிழின அழிவை தடுக்கும் யாரும் நண்பர்களே. இந்த ஜெ.யின் அறிக்கைக்காக எந்து மனப்பூர்வமான நன்றிகள் என்றும் உண்டு.

  4. Anonymous Says:

    ஜெ முடிவை வரவேற்கலாம். ஆனால் துள்ளிக் குதிக்க வேண்டாம். சாத்தானும் சில நேரங்களில் வேதம் ஓதுவதுண்டு.



    ஒரு ஈழத்துத் தமிழன்

  5. Mike Says:

    துரோகிகளும், மவுனச்சாமியார்களுமாக இருப்பதை விட, சாத்தனின் நண்பனாக இருப்பது மேல், சாத்தானின் ஆறுதல் வார்த்தைகளும் சுகமே.

  6. சுரேஷ் ஜீவானந்தம் Says:

    மைக்,
    இந்நிகழ்வைத் தொடர்ந்து ஜெ. அரசியலுக்காகவேனும் ஈழத்தின் மீது அக்கரை காட்டத் தொடங்கினால் அரசிய சமன்பாடுகள் மாறும்.
    கலைஞருக்கு தமிழ் மக்களின் மீது பற்று ஏதும் கிடையாது. அரசியல் செய்யத் தெரியும். இத்தனை நாளாக அவர் மௌனமாக இருந்ததால் அவருக்கு அரசியல் இழப்பு ஒன்றுமில்லை. இனி அப்படி இருந்தால் இழப்பு என்ற நிலை ஏற்பட்டால் நல்லது.
    // எமக்கு தேவை தமிழின அழிவை தடுக்கும் யாரும் நண்பர்களே. இந்த ஜெ.யின் அறிக்கைக்காக எந்து மனப்பூர்வமான நன்றிகள் என்றும் உண்டு.//
    தெளிவான பார்வை.

    // சாத்தானும் சில நேரங்களில் வேதம் ஓதுவதுண்டு.//
    ஜெ.யும் சாத்தான்தான். கருணாநிதியும் சாத்தான்தான். இந்த சாத்தான்கள் போட்டி போட்டுக் கொண்டு நமக்குச் சாதகமாக இறங்கினால் நமக்கு நல்லது. ( மற்றபடி அவர்களுக்கு தனிப்பட்ட தமிழ்ப்பற்று இல்லை.)

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails